12793 – பூதத்தம்பி இசை நாடகம்.

த.கலாமணி. அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, மார்கழி 2016. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).

xii, 48 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5 x 14.5 சமீ., ISBN: 978-955-4676-53-4.

ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இராசவாசல் முதலியாராக வாழ்ந்த பூதத்தம்பி என்பவரது வாழ்வில் இடம்பெற்ற துயரச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு த.கலாமணி அவர்களால் எழுதப்பட்ட இசை நாடக நூல் இது. இந்த இசை நாடகம் இதுவரை 60க்கும் மேற்பட்ட மேடையேற்றங்களைக் கண்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட இசை நாடகங்களில் நடித்ததில் பெற்ற அனுபவத்துடன் ஆசிரியரால் பிரதியாக்கம் செய்யப்பட்ட இந்நாடகம் நடிப்பதற்கும் படித்துச் சுவைப்பதற்கும் ஏற்றவகையில் எழுதப்பட்டுள்ளது. பூதத்தம்பியின் வரலாறுகூறும் வரலாற்று நூல்களில் பூதத்தம்பியின் குணப்பண்புகள் குறித்தும் வாழ்வியல் நடப்புகள் குறித்தும் உள்ள சித்திரிப்புகளில் வேறுபாடுகள் உண்டு. யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்றினை விபரிக்கும் முதல்நூலான, மயில்வாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை கூறும் பூதத்தம்பி கதை அமைப்புக்கு ஒத்ததாக 1950களின் தொடக்கத்தில் வடமராட்சியில் மேடை யேற்றப்பட்ட இசை நாடகப் பிரதி ஆசிரியரால் திருத்தி எழுதப்பட்டு 1999 முதல் இன்றுவரை இலங்கையின் பல பாகங்களிலும்அரங்கேற்றப்பட்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: 12700,12784.

ஏனைய பதிவுகள்

Unbelievable Monopoly dos

Content Tips Gamble Impressive Dominance Ii Position On the internet The guidelines Of one’s Dominance Slot Online Chii Chinonzi Epic Opportunity Added bonus Mune Unbelievable

14525 மழலை அமுதம் (கவிதைத் துளிகள்).

பீ.பீ.அந்தோனிப்பிள்ளை. மன்னார்: பீ.பீ. அந்தோனிப்பிள்ளை, ஆத்திக்குழி, முருங்கன், 1வது பதிப்பு, மார்கழி 2011. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு). vii, 51 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு:

Spiele Wie gleichfalls Was auch immer Vorhut

Content Tagesordnungspunkt 3 Casinos Für Echtgeld Aufführen Spielsymbole Und Spielablauf Die gesamtheit Führung, Untergeordnet King Of Luck Benannt, Mächtigkeit Vollumfänglich Spass Elaboriert Wie Jedweder Merkur24

slot Hugo

‎‎casino Slots Real cash For the App Shop/h1>