12795 – உறையும் பனிப்பெண்கள்: சிறுகதைகள்.

சுமதி ரூபன். சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி.55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்சு சாலை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2010. (சென்னை600 005: ஜோதி என்டர்பிரைஸஸ்).

96 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 21 x 14 சமீ.

கனேடிய புகலிடச் சூழலில் வெளிவந்த சுமதி ரூபனின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு.அமானுஷ்ய சாட்சியங்கள், இருள்களால் ஆன கதவு, ரெக்ஸ் எண்டொரு நாய்க்குட்டி, பெண்கள்: நான் கணிக்கின்றேன், சூட் வாங்கப் போறன், நஷ்ட ஈடு, வெளிச்சம், ஒரு நீண்ட நேர இறப்பு, எனக்கும் ஒரு வரம் கொடு, 40 பிளஸ், மூளி, உறையும் பனிப்பெண் ஆகிய 12 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. எந்த முன்முடிவுகளும் பாசாங்குகளுமின்றி வாழ்வின் மீதும் இருப்புசார் 894.8(4) தமிழ்ச் சிறுகதைகள் நூல் தேட்டம் – தொகுதி 13 445 சூழலின்மீதும் கேள்விகளை எழுப்பிச் செல்லும் இச்சிறுகதைகள் மனதைத் தொடும் நூண்ணலகுகளால் நெய்யப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61596. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 014585).

ஏனைய பதிவுகள்