12796 – ஒரு பெண்ணின் கதை: சிறுகதைத் தொகுதி.

எம்.எஸ்.அமானுல்லா. மூதூர் 5: எம்.எஸ்.அமானுல்லா, 162, அரபுக் கல்லூரி வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (மூதூர்: எஸ்.எச். பிரின்டர்ஸ்).

101 பக்கம், விலை: ரூபா 270., அளவு: 21.5 x 14.5 சமீ., ISBN: 978-955-38888-0-8.

2007இல் வெளிவந்து சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்ற இவரது ‘வரால் மீன்கள்’ கதைத் தொகுதியை அடுத்து இரண்டாவதாக வெளிவந்துள்ள சிறுகதைத் தொகுதி இது. இவர் இதுவரை 20 சிறுகதைகளையே எழுதியிருந்த போதிலும் அவற்றில் 16 சிறுகதைகள் தேசிய, சர்வதேச மட்டங்களில் பரிசுகளை வென்று கவனஈர்ப்பினைப் பெற்றுள்ளன. இவரது கதைமாந்தர்கள் பலரும் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களாகவே இருக்கிறார்கள். இத்தொகுப்பில் ஒரு பெண்ணின் கதை, ஆலம் விழுதுகள், அனாவும் அரைப் பவுண் சங்கிலியும், பசி, ஒற்றை மாட்டு வண்டி, தாய்மை, தானும் தன் சுகமும், தாய்ப்பசு ஆகிய இவரது எட்டு சிறுகதைகள் அடங்கியுள்ளன. மூதூரின் மண் மணத்தை, கடலை, மலையை, மீன்களை, சாதாரண உழைக்கும் மக்களை, வறுமையை வெளிப்படுத்தவதாக இந்நூலுக்குக் குறிப்புரை வழங்கியுள்ள நந்தினி சேவியர் குறிப்பிடுகின்றார். எம்.எஸ்.அமானுல்லா, விஞ்ஞான ஆசிரியராக இருந்து அதிபராக ஓய்வுபெற்றவர். மாணவப் பருவம் முதல் எழுத்துத் துறையில் ஆர்வம் கொண்டவர்.

ஏனைய பதிவுகள்