12797 – ஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை: சிறுகதைகள்.

வண்ணை தெய்வம் (இயற்பெயர்: தெய்வேந்திரன்). சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல. 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2018. (சென்னை 94: ஆதிலெட்சுமி பிரிண்டர்ஸ்).

xxviii, 244 பக்கம், விலை: இந்திய ரூபா 170., அளவு: 21 x 14 சமீ.

அகரம் சஞ்சிகையில் பிரசுரமான வண்ணை தெய்வத்தின் 26 சிறுகதைகளும், 12 குட்டிக் கதைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பொன்னம்மாவும் ஒன்பது பிள்ளைகளும், திருமணங்களின் நிறம் சிகப்பு, வயது வந்தவர்களுக்கு மட்டுமல்ல, அந்தரங்கமான சோகங்கள், அவள் அம்மா ஆகிவிட்டாள், கால்கட்டு, எத்தனை எத்தனை மீனாட்சிகள், நோயாளிகள், பெரும் குடிமக்கள், கருணை, ஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை, ஒரு கணவன்-ஒரு மனைவி-ஒரு மரணம், ஒரு வாத்தியார் பாடம் படிக்கின்றார், இன்றைய பிள்ளைகள் பெற்றோரைத் திருத்துகின்றார்களா? பழிவாங்குகின்றார்களா?, தொலைபேசிகள், வெளிநாட்டி லிருந்து யாழ்ப்பாணம் போன வெள்ளையம்மா, வாக்குமூலங்கள், வாழ்க்கையின் மாற்றங்கள், கடிதங்கள், புதிய வெள்ளைக்காரர்கள், அவர்கள் மீண்டும் முருங்கை மரங்களில் ஏறுகின்றார்கள், ஒரு பூசாரி நாய் வளர்க்கின்றார், சிறைப் பறவைகள், கடன்காரர்கள், நியாயங்கள் சிரிக்கின்றன, அவள் சிலுவை சுமக்கின்றாள் ஆகிய தலைப்புகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன. தொடர்ந்து இடம்பெறும் பன்னிரு குட்டிக்கதைகளும் அரங்கேற்றம், நிறம் மாறியவர்கள், அகதிகள், ஒட்டாத உறவுகள், கொடுப்பனவு, விரதச் சோறு, நாங்கள் இப்படித்தான், பொருத்தம், சகுனம், அவனால் மாற முடியவில்லை, குற்றவாளிக் கூண்டில் மனுநீதிச் சோழன், சீட்டு ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

12156 – தேவாரத் திருவமுதம்.

வே.க.ப.நாதன் (உரையாசிரியர்). கொழும்பு 7: வே.க.ப.நாதன், 128/5 வாட் பிளேஸ், 1வது பதிப்பு, 1954. (சென்னை 600005: கபீர் பிரின்டிங் வேர்க்ஸ்). x, 118 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ. தினகரன்

12844 – பல நாடுகளில் வசிக்கும் வாசகர்களுக்குப் பயனுள்ள குறிப்புகள்.

கே.எஸ். சிவகுமாரன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல. 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2013. (சென்னை 94: பி.வி.ஆர். ஆப்செட்). (4),

13028 சொல்லும் செய்திகள்.

வி.என்.மதிஅழகன். சென்னை 600 002: காந்தளகம், 68, அண்ணா சாலை, 1வது பதிப்பு, ஜுன் 2018. (சென்னை 600 002: கலைமாமணி சசிரேகா பாலசுப்பிரமணியம், காந்தளகம், 68, அண்ணா சாலை).144 பக்கம், புகைப்படங்கள், தகடுகள்,

12518 – வணிகக் கல்வி: உயர்தர வகுப்புகளுக்குரியது:

வங்கிகளும் வங்கித் தொழிலும். சு.இராஜகிருஷ்ணர் இரகுநாதன். கண்டி: பவளரத்ன பப்ளிக்கேஷன்ஸ், 396/12டீ, பேராதனை வீதி, 2வது பதிப்பு, ஜனவரி 2001, 1வது பதிப்பு, ஜுன் 1993. (கொழும்பு 15: கலர் பிரின்ட்ஸ், 712, பு;மெண்டால்

14856 வள்ளுவரின் வழி நடப்போம்.

பா.விக்கினேஸ்வரன் (தொகுப்பாசிரியர்). சாவகச்சேரி: தென்மராட்சி இலக்கிய அணி, கிராம்புவில், 1வது பதிப்பு, மார்ச் 2014. (யாழ்ப்பாணம்: ஷாம்பவி பதிப்பகம், 276 கஸ்தூரியார் வீதி). viii, 127 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 19×12.5