12798 – கண்ணாடி சுவர்களும் சில காகித மனிதர்களும்.

மொழிவரதன் (இயற்பெயர்: க.மகாலிங்கம்). கொட்டகலை: கலாபூஷணம் க.மகாலிங்கம், கொட்டகலை தமிழ்ச் சங்கம், 34ஃ20, மொழி அகம், கணபதிபுரம், 1வது பதிப்பு, மே 2017. (ஹட்டன்: யூனிவர்சல் அச்சகம்).

127 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21 x 15 சமீ., ISBN: 978-955-7444-00-0.

மொழிவரதனின் 19 சிறுகதைகளை உள்ளடக்கிய இத்தொகுப்பு மலையக வாழ்க்கையைச் சுற்றியே பின்னப்பட்டுள்ளது. மலையக மக்களின் பெரும் உழைப்பு வியர்த்தமாகிப் போகும் அவலத்தை, அந்த உழைப்பு அந்த மக்களுக்கு மிகவும் அடிப்படையான வாழ்வாதாரங்களைக் கூட வழங்க மறுக்கும் கொடூரத்தை இவரது கதைகள் பேசுகின்றன. காற்றில் பறக்காத பட்டங்கள், கயிற்றில் ஆடும் பெண், தோணிகள் எதிர்கொள்ளும் அலைகள், ஊமையான உமையாள், வாந்தி, கோளாறு, பொன்னம்மா என்ற பெண் அம்மாள், வேர்கள் பதிந்த மண், தன்னையும் ஈந்திடுவான் மண்ணுக்கே, ராமு நீ தனிமரமல்ல, பதில் கிடைக்கும், பேச்சாளர், வினாக்களும் விடைகளும், கம்பீரம், சம்பளப் பாக்கி, கண்ணாடி சுவர்களும் சில காகித மனிதர்களும், அப்பா, இயற்கையோடு இயற்கையாய், காவலர்கள் ஆகிய தலைப்புகளில் 19 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்