12801 – குழந்தையும் தேசமும் (சிறுகதைகள்).

சி.சிவசேகரம். கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, 44, மூன்றாவது தளம், ஊ.ஊ.ளு.ஆ கொம்பிளெக்ஸ், 1வது பதிப்பு, நவம்பர் 2011. (கொழும்பு 11: வேர்ல்ட் விஷன் கிராப்பிக்ஸ், இல. 5, முதலாம் மாடி, 2வது ரோகிணி ஒழுங்கை).

xii, 200 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21 x 14.5 சமீ., ISBN: 978-955-8637-31-9.

சமகாலத்தில் தான் அவதானித்த அவலங்களையும் அநீதிகளையும், ஒவ்வாமை களையும், அப்பாவித்தனங்களையும், அடாவடித்தனங்களையும், தன் உணர்வானுபவங்களையும், சிந்தனைகளையும், மற்றவர்களோடு, அவர்களின் கவனத்தை ஈர்க்கத்தக்க வகையில், பகிர்ந்துகொள்வதற்குச் சிவசேகரம் சிறுகதையை ஒரு ஊடகமாகத் தேர்ந்தெடுத்துள்ளார். சீருடை, ஒரு நாள் மத்தியானம் நடந்தது, சபிக்கப்பட்டவர்கள், ஐயரும் அவதாரமும், நீங்கும் நினைவுகள், மீன்களுடன் ஒரு நடைப்பயணம், தம்பரின் இரும்புப் பெட்டி, நிவாரணம், சிறை மீட்புப் படலம், குழந்தையும் தேசமும், இக்கரையும் அக்கரையும், செங்காய், புல்லு வெட்டுவது யார்? கொழுந்தெடுக்கிறது யார்?, ஓடும் வண்டியில் ஒரு பாடல், மீட்சி, பட்டுத் தெளிந்தது, மதமாற்றம், ஆள் மாறாட்டம், குமாரி, அனற்காற்று வீசிய ஒரு நாளில், பாடசாலை வாங்கு, டோன்ற் மென்ஷன் ஆகிய தலைப்புகளில் அவ்வப்போது இவர் எழுதி வெளியிட்ட 22 சிறுகதைகளை இத்தொகுப்பு உள்ளடக்குகின்றது. நூலின் முன் அட்டையில் இஸ்ரேலிய முற்றுகைக்குட்பட்ட காஸாவில் ஒரு சிறுவனின் புகைப்படமும், பின் அட்டையில் பலஸ்தீன மேற்குக்கரை (றுநளவ டீயமெ) பகுதியில் காணப்பட்ட ஒரு சுவரோவியத்தின் பிரதியும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 015427. கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகப் பதிவெண் 54182).

ஏனைய பதிவுகள்

Sports betting 101

Content Bwin sports betting promotions – Daily Fantasy Sports Dfs How to Wager on Pony Race: Novices Self-help guide to Setting A bet, Glossary Out