கொற்றை பி.கிருஷ்ணானந்தன். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, மே 2017. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
x, 116 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 18 x 13 சமீ., ISBN: 978-955-4676-61-9.
கொற்றை பி.கிருஷ்ணானந்தன் இன்றைய காலத்தின் தேவை கருதி சிறுகதையின் வடிவத்தை பல்பரிமாணங்களில் எழுதுகின்ற திறனை வளர்த்துக்கொண்டவர். சிறுகதைகள், குறுங்கதைகள், குட்டிக்கதைகள் என மூன்று வகைமாதிரிகளிலும் கதைகளைப் படைக்கும் திறன் மிக்கவராக அவர் திகழ்கின்றார். கொற்றையினுடைய சுமார் 40 குட்டிக்கதைகள் ஞானம் சஞ்சிகையில் ஒக்டோபர் 2011 முதல், மாதந் தோறும் இரண்டு கதைகள் என்ற அடிப்படையில் வெளிவந்தன. அப்பொழுது அவற்றின் சுவாரஸ்யம் பற்றி வாசகர்கள் பலரும் தத்தம் இதயங்களின் வெளிப்பாடுகளை அடுத்தடுத்த இதழ்களில் வாசகர் கடிதங்களின் வாயிலாகப் பதிவுசெய்து மகிழ்ந்தனர். இக்கதைகள் யாவும் தொகுக்கப்பெற்று இந்நூல்வழியாக நூலுருவாகியுள்ளன. வடமராட்சியில் பொலிகண்டி கிழக்கு, அல்வாய் மேற்கு, கரணவாய் வடக்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைத் தன்னகத்தே கொண்ட தாக வல்வெட்டித்துறையை அண்டி அமைந்துள்ளது கொற்றாவத்தையாகும். இந்நூல் 76ஆவது ஜீவநதி வெளியீடாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62102).