12803 – சமாதானத்துடன் சில கதைகள்.

மக்கள் சமாதான இலக்கிய மன்றம். மாத்தறை: மக்கள் சமாதான இலக்கிய மன்றம், 52டB, தர்மரத்ன மாவத்தை, 1வது பதிப்பு, ஜனவரி 1996. (மஹரகம: தரஞ்ஜீ பிரின்ட்ஸ், 506, ஹைலெவல் வீதி, நாவின்ன).

vi, 96 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 14 சமீ., ISBN: 955-9430- 02-5.

தெனகம சிரிவர்த்தன மன்றத்தின் செயலாளராகப் பணியாற்றிய வேளையில், மக்கள் சமாதான இலக்கிய மன்றத்தினரால் மும்மொழிகளிலும் நடாத்தப்பட்ட ‘சமாதானம்’ என்ற கருத்தியலில் எழுதப்படும் சிறுகதைப் போட்டிக்கென கிடைக்கப்பெற்ற சிறுகதைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில சிறுகதைகளின் தொகுப்பு இது. தேர்வுக்குழுவின் நடுவர்களாக ரஞ்சித் பத்திரன, ரத்னஸ்ரீ விஜேசிங்க, எஸ்.ஜீ.புஞ்சிஹேவா, ஜீ.ஜீ.சிறிசேன, யோ.பெனடிக்ற் பாலன், சோ.ரஞ்சகுமார், மு.பொன்னம்பலம்ஆகிய இலக்கியகர்த்தாக்கள் பணியாற்றினர். பாதை தவறாமல் (சோ.ராமேஸ்வரன்), நிகழ்கால நிதானங்கள் (கே.குணநாதன்), கடவுளின் குழந்தைகள் (இரா.பரமேஸ்வரன்), மனிதம் (எம்.பி.சிராஜ்டீன்), ஏன் இந்த நிலை (இர்‡பானா ஜெப்பார்), பேதமில்லா நெஞ்சங்கள் (எஸ்.இலங்கேஸ்வரன்), எனக்குள் உதிர்ந்த அவன் (எஸ்.எச்.அர‡பத்), நேசத்துள் ஒரு தேசம் (அக்குறணை எம்.நஸுபர்), தியாகதீபம் (பாக்கியராஜன் அனுராதா), மதம் (எம்.எச்.எம்.ஷம்ஸ்) ஆகிய தேர்வுபெற்ற சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 19304).

ஏனைய பதிவுகள்

Posto più economico per comprare Bactrim

Perché l’antibiotico abbassa le difese immunitarie? Ordine generico di Bactrim Quando assumere Bactrim compresse? generico Bactrim Trimethoprim And Sulfamethoxazole Canada Quanto tempo Bactrim 800 +

14495 சிங்கள அலங்காரங்கள்.

உ.நவரத்தினம் (பதிப்பாசிரியர்). மஹரகம: தொலைக் கல்வித் துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1994. (தெகிவளை: ஏ.ஜே. பிரின்ட்ஸ், இல. 1 B, P.T. டீ சில்வா மாவத்தை). 52 பக்கம், சித்திரங்கள்,

12813 – முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு (சிறுகதைகள்).

அகரமுதல்வன். சென்னை 600078: டிஸ்கவரி புக் பேலஸ், பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுசுக்கு அருகில், கே.கே. நகர் மேற்கு, 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). 111 பக்கம், விலை: இந்திய ரூபா

14838 கலை இலக்கிய கட்டுரைகள்.

எஸ்.மோசேஸ். மட்டக்களப்பு, எஸ்.மோசேஸ், கிருஷி வெளியீடு, 1வது பதிப்பு, 2010. (மட்டக்களப்பு: R.S.T. என்டர்பிரைசஸ்). x, 11-140 பக்கம், விலை: ரூபா 475., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-51403-2-4. இந்நூலில் கலை-இலக்கியம் தொடர்பான