ஆ.முல்லை திவ்யன். வல்வெட்டித்துறை: வர்ணா வெளியீடு, கொற்றன்தறை, பொலிகண்டி கிழக்கு, 1வது பதிப்பு, டிசம்பர் 2015. (அல்வாய்: மதுரன் கிராப்பிக்ஸ் அன்ட் ஓப்செட் பிரின்டர்ஸ்).
xi, 64 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 17 x 12.5 சமீ., ISBN: 978-955-7934-00-6.
தாய்மண்ணின் சாரல் தழுவும் படைப்புக்களின் தொகுப்பு. இலங்கையில் இடம்பெற்ற போர் காரணமாக ஆசிரியர் பெற்ற அனுபவங்களின் வெளிப்பாடாக இவரது சிந்தனையில் உதித்த எட்டுக் கதைகளின் தொகுப்பு இது. மானிட நேயமும் மண்ணின் நிலைகண்டு ஏற்படும் துயரும், புரட்சி வீரர்களை நேசிக்கும் மனப்பாங்கும், தமிழினத்தின் விடிவும் இவரது எழுத்தின் கருப்பொருள்களாகின்றன. போர்க்கால நினைவுகள் வரிகளாகி சிறுகதை உருவம்பெற்று நினைவு மறவாத கடந்த காலங்களையும் மிக மென்மையான நயத்துடன் ஆழமாகக் கூறி நிற்கின்றது. இடம்பெயர்வு, மரணம், போராட்ட வாழ்வு எனத் துயரப்பட்டபோதும் அத்துயரைத் தாண்டி எழுந்து நிற்கும் ஒரு இனத்தின் குரலாக இக்கதைகள் அமைகின்றன. அழகிய தமிழ்ப்பெயர்களால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள், செம்மண் வீதி களினூடாக வாடைக்காற்றைச் சுவாசித்தவண்ணம் செவ்வரத்தம் பூக்களை (செம்பருத்திப்பூக்கள்) நுகர்ந்தவண்ணம் இக்கதைகளில் மண்வாசனையுடன் பயணிக்கின்றன. கத்தியின்றி இரத்தமின்றி தமிழ் இனம் விடிவு காணவேண்டும் என்பதில் அக்கறைகொண்ட ஆ.முல்லைதிவ்யன் முல்லை மண் தந்த ஒரு இளம் படைப்பாளி. முல்லைத்தீவில் பிறந்து வளர்ந்து தற்போது பொலிகண்டியில் வாழும் இவர் ஏற்கெனவே நான்கு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டவர். இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி இது. இருள் விலகுமா?, வேலை கிடைச்சாச்சு, தாய்நிலம், பாசம், செவ்விரத்தப் பூ, சிகரம், வாழும் ஆசை, விடிவெள்ளி ஆகிய எட்டு சிறுகதைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. முல்லைத்திவ்வியன் எழுதிய முதலாவது சிறுகதைத் தொகுதியின் இரண்டாவது பதிப்பு இது. வாழும் ஆசை, விடிவெள்ளி ஆகிய முதற்பதிப்பில் இடம்பெற்ற சிறுகதைகளை நீக்கி, இருள் விலகுமா?, வேலை கிடைச்சாச்சு, தாய்நிலம், பாசம், செவ்விரத்தப் பூ, சிகரம், ஆகிய ஆறு சிறுகதைகளுடன், புதிதாக எழுதப்பட்ட பாரமில்லாக் கனவுகள், நட்சத்திரப் பூக்கள், பெயர், மனதில் பெய்த மழை ஆகிய மேலதிகமான நான்கு கதைகளையும் சேர்த்ததாக, இத்தொகுதி இடம்பெற்றுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 252812CC).