தமிழ்நதி (இயற்பெயர்: கலைவாணி இராஜகுமாரன்). சென்னை 600017: காதை, கே.கே. புக்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 19, சீனிவாச ரெட்டி சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2007. (சென்னை 600005: மீரா ஓப்செட்).
(8), 9-158 பக்கம், விலை: இந்திய ரூபா 90.00, அளவு: 21 x 14 சமீ.
திருக்கோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் தமிழ்நதி. ஈழத்துப் போரினால் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தவர். கனடாவில் வாழ்ந்த காலத்தில் கலைவாணி இராஜகுமாரன் என்ற பெயரில் சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரை எனப் பல்வேறு ஆக்க இலக்கிய வடிவங்களையும் பயன்படுத்தித் தனது படைப்புகளை வெளியிட்டவர். தற்காலிகமாக சென்னையில் வாழ்ந்து வரும் வேளையில் தமிழ்நதியின் சூரியன் தனித்தலையும் பகல் (கவிதைகள்) முன்னதாக வெளிவந்துள்ளது. கானல்வரி – ஆசிரியரின் முதலாவது குறுநாவல். பார்த்தீனியம் இவரது இரண்டாவது நாவல். நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது என்ற இந் நூல் தமிழ்நதியின் முதலாவது சிறுகதைத் தொகுப்பாகும். நதி நடந்த சுவடு, அந்த எசமாடன் கேக்கட்டும், இருப்பு, ஊர், நலம் மற்றுமோர் நிலா, கப்பற் பறவைகள், வீடு, காத்திருப்பு, என் பெயர் அகதி, அவனது கேள்வியும் அவனது ஆண்டுக் குறிப்புகளும், மதுவந்தி, மனக்கூத்து, விழுதின் கண்ணீர், தொலைவில் தெரியும் நீர்நிலைகள், பெண் எனும் ஞாபகம், கவரிமான்கள், கதை சொன்ன கதை, நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது ஆகிய 18 தலைப்புகளில் இவை எழுதப் பட்டுள்ளன.