முருகேசு ரவீந்திரன். யாழ்ப்பாணம்: யாழ். இந்துக் கல்லூரி நண்பர்கள் (உயர்தரம் 1985) வட்டம், இணை வெளியீடு, யாழ்ப்பாணம்: திருமதி அருணா ரவீந்திரன், அருணோதயம், 22/10, பாரதி வீதி, கச்சேரி-நல்லூர் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2014. (யாழ்ப்பாணம்: அன்ரா பிரின்டர்ஸ், 356 ஏ, கஸ்தூரியார் வீதி).
xv, 90 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20 x 15 சமீ., ISBN: 978-955-54221-1-6.
யாழ்ப்பாண மக்களின் வாழ்வியலைக் கருவாகக்கொண்ட 12 சிறுகதைகளின் தொகுப்பு. தளிர்ப்பின் வாட்டம், இறுக்கம், நிலவு நீரிலும் தெரியும், தெளிவு, கானலைக் கடத்தல், மாறும் மனிதர்கள், தொண்ணூறுகளின் தொடக்கம், காகங்களுக்கும் நாய்களுக்கும், நல்லநாள், தேடல், மாலாக்குஞ்சி, தனிமையின் நீட்சியில் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. இறுக்கம் என்ற கதை போர்க்கால வாழ்வின் துயரைப் பகிர்கின்றது. போர்க்காலத்தில் தன் குடும்பத்தைப் பிரிந்து கொழும்பில் வாழும் குடும்பத் தலைவன் கொழும்பில் நல்ல தொழிலை உதறித்தள்ளிவிட்டு குடும்பத்துடன் இருக்கவென்றே உள்ளுரின் சிறிய தொழிலை நாடமுடிவெடுப்பது இக்கதை. தலைப்புக் கதையும் பிரிவின் துயரின் மற்றொரு பரிமாணத்தைச் சொல்கின்றது. தன் மகளுக்கும் தனக்கும் இடையே உள்ள பிரிவுத்துயரை ஒரு ஐஸ்கிரீம் பரிமாற்றத்தினூடாக அசைபோடும் சுஜீயின் தந்தையின் பாத்திரத்தின் வாயிலாக பகிரவைக்கிறார். முருகேசு ரவீந்திரன் இலங்கை வானொலியின் அறிவிப்பாளராவார். வடக்கு மாகாண கல்வி, பண் பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை, மற்றும் இளைஞர் விவகார அமைச்சு 24.10.2015இல் கிளிநொச்சியில் நடாத்திய வடக்கு மாகாண இலக்கியப் பெருவிழாவில் 2014இல் வடக்கு மாகாணத்தில் வெளிவந்த சிறந்த சிறுகதை நூலுக்கான பரிசை வென்ற நூல் இதுவாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 243036PL).