12809 – பரதேசம் போனவர்கள்.

க.நவம். வல்வெட்டித்துறை: நான்காவது பரிமாணம், தெணியகம், பொலிகண்டி, 1வது பதிப்பு, 2017. (நெல்லியடி: பரணீ அச்சகம்).

120 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 18.5 x 12.5 சமீ., ISBN: 978-955-7295-01-5.

நூலின் தலைப்பைத் தாங்கிய சிறுகதைகள் எதுவும் இத்தொகுப்பில் இல்லாத போதிலும் அனைத்துக் கதைகளும் புலம்பெயர்ந்து சென்றவர்களின் வாழ்வியல் அனுபவங்களைப் பேசுவதாகவே உள்ளன. இவற்றில் பல சோகங்கள் சொல்லப் பட்டிருக்கின்றன. வெளிப்பார்வைக்கு புலம்பெயர்ந்தோர் சௌகரியமாக வாழ்வதான மாயை தாயகத்தில் தோற்றம்பெற்றிருந்த போதிலும், இக்கதைகள் அவர்களின் ஆத்மார்த்தமான இழப்புகளையும், பல்வேறுவிதமான பதகளிப்பு களுடன் அவர்கள் வாழ்வதையும் நுணுக்கமாகப் பதிவுசெய்துள்ளன. கத்தரிக் குழம்பும் கருத்து முரண்பாடும், வெள்ளைப் புறா ஒன்று, எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன், ஜீவித சங்கல்பம், பசிக்கு நிறமில்லை, தினவு, பிச்சைக் காசு, விருந்தாளி, காற்றைப் போன்றதடி என் காதல், ஆசாரசீலம், சீருடை ஆகிய 11 தலைப்புகளில் க.நவம் எழுதிய கதைகள் இங்கே தேர்ந்து தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Liefste Echtgeld Slots Im Toets

Volume 50 gratis spins black horse op registratie geen deposito – Gratis Acteren Amerika, Echt Bankbiljet Casinos Slot Rtp Aanschouwen: Bedrijfstop Slot Offlin Uitbetalingen Kann