12810 – பன்னீர் வாசம் பரவுகிறது (சிறுகதைகள்).

மருதூர் ஏ.மஜீத். கல்முனை: ஸாகிறாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1979. (மட்டக்களப்பு: கத்தோலிக்க அச்சகம்).

(4), 74 பக்கம், விலை: ரூபா 5.00, அளவு: 18 x 12.5 சமீ.

மருதூர் ஏ. மஜீத், பத்திரிகைகள், சஞ்சிகைகள், ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்பன வற்றில் ஏற்கனவே வெளிவந்த தமது சிறுகதைகளுள் பதினென்றைத் தொகுத்து ‘பன்னீர் வாசம் பரவுகிறது’ என்னும் இச்சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். மஜீத் நாடறிந்த எழுத்தாளர், கவிஞர். புதுமைக் கருத்துக் 894.8(4) தமிழ்ச் சிறுகதைகள் 454 நூல் தேட்டம் – தொகுதி 13 களையும், சிந்தனைத் தெளிவையும் கொண்டவர். அக் கருத்துக்களின் வெளிப்பாடே இச் சிறுகதைகள். அவள் ஏன் அழதாள்?, டாக்டர் ஒருபிடி மண்ணைஅள்ளிச் செல்கிறார், தாய்மையின் முன்னால், உண்மை ஊமையாய் ஊரெல்லாம் அலைகிறது, நானும் ஒரு மனிதன், பாலையில் ஒரு பனித்துளி, குப்பையிலே ஒரு குன்றுமணி, பன்னீர் வாசம் பரவுகிறது, பக்கீர் ஒருவர் பள்ளி கட்டுகிறார், ஒரு யுகம் முடிந்தது, என் மகள் ஒரு விடிவெள்ளி ஆகிய 11 கதைகளைக் கொண் டுள்ள சிறுகதைத் தொகுப்பு இது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18382).

ஏனைய பதிவுகள்

14037 பகவத் கீதை வெண்பா: மூன்றாம் பாகம்: ஞான யோகம் (அத்தியாயம் 13-18) விளக்கக் குறிப்புடன்.

ஏ.பெரியதம்பிப்பிள்ளை. சுன்னாகம்: தனலக்குமி புத்தகசாலை, 1வது பதிப்பு, நவம்பர் 1976. (சுன்னாகம்: முத்தையா சபாரத்தினம், திருமகள் அழுத்தகம்). xxxii, 132 பக்கம், விலை: ரூபா 7.00, அளவு: 21×14 சமீ. மட்டக்களப்பு புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை

14013 கிராமிய பூபாளம் 2018: சர்வோதய சிறப்பு மலர்.

மலர்க்குழு. ஜேர்மனி: புங்குடுதீவு தொண்டர் திருநாவுக்கரசு சர்வோதய நற்பணி ஒன்றியம், என்னப்பெற்றால், 1வது பதிப்பு, 2018. யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி). 117 பக்கம், வண்ணப்படங்கள், விலை: அன்பளிப்பு, அளவு:

13003 செயல்முறை கணிப்பொறி.

கு. இராயப்பு (புனைபெயர்;: கலையார்வன்). யாழ்ப்பாணம்: நியோ கல்ச்சரல் கவுன்சில், 28/1, சென்.ஜேம்ஸ் வெஸ்ட் வீதி, 2வது பதிப்பு, ஆடி 1999, 1வது பதிப்பு, தை 1999. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்).(6), 202

12596 – உயர்தர மாணவர் பௌதிகம்: வெப்பவியல்.

அ.கருணாகரர் (மூலம்), க.புவனபூஷணம் (மீள்பார்வை). யாழ்ப்பாணம்: மாசில் பதிப்பகம், ஈச்சமோட்டை, 2வதுபதிப்பு, ஆண்டு விபரம்தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்:நாமகள்அச்சகம்,319,காங்கேசன்துறை வீதி). iv, (4), 216 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. க.பொ.த.ப. (உயர்தர)