12810 – பன்னீர் வாசம் பரவுகிறது (சிறுகதைகள்).

மருதூர் ஏ.மஜீத். கல்முனை: ஸாகிறாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1979. (மட்டக்களப்பு: கத்தோலிக்க அச்சகம்).

(4), 74 பக்கம், விலை: ரூபா 5.00, அளவு: 18 x 12.5 சமீ.

மருதூர் ஏ. மஜீத், பத்திரிகைகள், சஞ்சிகைகள், ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்பன வற்றில் ஏற்கனவே வெளிவந்த தமது சிறுகதைகளுள் பதினென்றைத் தொகுத்து ‘பன்னீர் வாசம் பரவுகிறது’ என்னும் இச்சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். மஜீத் நாடறிந்த எழுத்தாளர், கவிஞர். புதுமைக் கருத்துக் 894.8(4) தமிழ்ச் சிறுகதைகள் 454 நூல் தேட்டம் – தொகுதி 13 களையும், சிந்தனைத் தெளிவையும் கொண்டவர். அக் கருத்துக்களின் வெளிப்பாடே இச் சிறுகதைகள். அவள் ஏன் அழதாள்?, டாக்டர் ஒருபிடி மண்ணைஅள்ளிச் செல்கிறார், தாய்மையின் முன்னால், உண்மை ஊமையாய் ஊரெல்லாம் அலைகிறது, நானும் ஒரு மனிதன், பாலையில் ஒரு பனித்துளி, குப்பையிலே ஒரு குன்றுமணி, பன்னீர் வாசம் பரவுகிறது, பக்கீர் ஒருவர் பள்ளி கட்டுகிறார், ஒரு யுகம் முடிந்தது, என் மகள் ஒரு விடிவெள்ளி ஆகிய 11 கதைகளைக் கொண் டுள்ள சிறுகதைத் தொகுப்பு இது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18382).

ஏனைய பதிவுகள்