12811 – மழைக்கால இரவு (சிறுகதைகள்).

தமிழினி ஜெயக்குமரன். சென்னை 600102: பூவரசி வெளியீடு, ஊ-63இ முதலாவது தளம், முதலாவது பிரதான சாலை, அண்ணா நகர், இணை வெளியீடு, வாகனேரி 30424: ஷேக் இஸ்மாயில் நினைவு வெளியீடு, ளுஐஆ Pரடிடiஉயவழைnஇ ஆற்றங்கரை வீதி, காவதாமுனை, 1வது பதிப்பு, ஜனவரி 2017. (சென்னை 600102: பூவரசி வெளியீடு, C-63இ முதலாவது தளம், முதலாவது பிரதான சாலை, அண்ணா நகர்).

110 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 21.5 x 14 சமீ., ISBN: 978-93-81322- 37-6.

‘அளுயம் சிஹினய’ என்ற பெயரில் முன்னர் சிங்களத்தில் மொழிபெயர்ப்புச் செய்து வெளியிடப்பட்ட சிறுகதைத் தொகுதியின் தமிழ்ப்பதிப்பு இது. இத்தொகுதியில் உள்ள ஆறு கதைகளும் ஈழத்தின் போர்க்கால வரலாற்றின் 2009ஆம் ஆண்டுக்காலத்தைச் சுற்றிப் பேசுகின்றன. தமிழினி ஈழப்போராட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினராகச் செயற்பட்டவர். இறுதிக்காலத்தில் இராணுவத்தின் தடுப்புக்காவல்களிலும், ‘புனர்வாழ்வு’ முகாம்களிலும் தன் காலத்தைக் கழித்து விடுவிக்கப்பட்டவர். சிலகாலங்களில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிர்நீத்தவர். போரின் தோல்வியும், சிறை வாழ்வும் தமிழினியைப் பாதித்தவகையை இதிலுள்ள பலகதைகளின் எழுதப்படாத வரிகளின்மூலம், சொல்லாத சேதிகளாக, மனிதத்தின் வலிமையுணர்த்தும் கதைகளாக எம்மைவந்தடைகின்றன. கவுரவக் கவசம், மழைக்கால இரவு, சுதர்சினி, வைகறைக் கனவு, பாக்கியம்மா, எனது மகன் வந்திட்டான் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட கதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன.

ஏனைய பதிவுகள்