12815 – வசந்தகால நினைவுகள்: சிறுகதைத் தொகுதி.

கே.ஈஸ்வரலிங்கம். கொழும்பு 14: சினிலேன்ட் வெளியீடு, 13, சென்.ஜோசப் வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 1994. (கொழும்பு 14: நிரோஷன் பிரிண்டர்ஸ்).

36 பக்கம், விலை: ரூபா 40., அளவு: 19 x 15 சமீ.

கொழும்பு 14, பாபா பிள்ளை பிளேசைச் சேர்ந்தவரான கே.ஈஸ்வரலிங்கம், 1984 முதல் 1994 வரையிலான பத்தாண்டு காலத்தில் தான் எழுதிய ஐந்து சிறுகதைகளை இத்தொகுதியில் தந்துள்ளார். சித்திரா வந்தாள், கனவுகள் கரைவதில்லை, உறவு, சலனம், ராசிக்காரன் ஆகிய ஐந்து கதைகள் இதில் அடங்கியுள்ளன. கணவன்- மனைவி குடும்ப நலம் கூறும் ராசிக்காரன், சலனம் ஆகிய கதைகளும், ஆண்- பெண் உறவு என்றால் பாலியல் ரீதியானது மட்டுமே அல்ல. மாறாக, சகோதர பாசமும் அதில் உண்டு என்பதைக் காட்டும் உறவு என்ற கதையும், சீதன மாலைக் காகத் தாலி கட்டத் தயங்கியவனுக்கு கழுத்தை நீட்ட மறுக்கும் மணப்பெண்ணின் கதையான கனவுகள் கரைவதில்லை என்ற கதையும், தமிழ் சினிமாக் காட்சிப் படிமங்களாக வாசகர் மனதில் தோற்றம் பெறத்தக்கவை. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21697).

மேலும் பார்க்க: 12866

ஏனைய பதிவுகள்

16277 1675 இல் மட்டக்களப்பு டச்சுக்காரரை எதிர்த்த இளஞ்சிங்கன் : தென்மோடிக் கூத்து இலக்கணமும் இலக்கியமும்.

ஈழத்துப் பூராடனார் (க.தா.செல்வராஜகோபால்), எட்வேட் சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: க.தா.செல்வராஜகோபால், இல. 3, 1292, Sherwood Mills Bloved, Mississauga L5V, 1S6, Ontario, 1வது பதிப்பு, 2005. (கனடா: ஜீவா பதிப்பகம், ரொரன்டோ).