12816 – கலங்கரை விளக்க அடிவாரமும் ஏனைய கதைகளும்: சிங்கள சிறுகதைத் தொகுப்பு 1.

எம்.எச்.எம்.யாக்கூத், திக்வல்லை கமால், எஸ்.ஏ.சீ.எம்.கரமத் (மொழிபெயர்ப்பாளர்கள்). ஆனமடுவ: தோதென்ன வெளியீட்டகம், உஸ்வௌ வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2008. (கனேமுல்ல: ஜயன்ட் பிரின்ட் கிராப்பிக்ஸ், 52 A/1, கலஹிட்டியாவ).

viii, 9-264 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21 x 14 சமீ., ISBN: 978-955-1848-20-0.

இனங்களுக்கிடையேயான உறவை இலக்கியத்தின் வழியாக வலுப்படுத்தும் நோக்கில் 18 சிங்களச் சிறுகதைகள் இங்கு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. கலங்கரை விளக்கம், தேவன், தேன்மா, தாய், எனது அருமையான புனைகதைக்குக் குறுக்காக விழுந்துகிடந்த பிச்சைக்காரன், பாவப்பட்ட ஆவிகளின் கதை, மணிக்கல் தேடுவோர், பேய் பிசாசுகளின் இரவு, அத்தியாவசியப் பாவனைப் பொருட்கள், நண்பர்கள், இரத்த உறவினர்கள், எமக்கு விடிவு கிடைக்குமா?, விடுதலை, மறுபிறவி, தெய்யனே (ஆண்டவனே), மாட்டுவண்டி, உயரதிகாரியும் சிற்றூழியரும், வெள்ளைக்கொடி ஆகிய 18 கதைகள் இத்தொகுப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 53295).

ஏனைய பதிவுகள்

17307 ஈழத்துக் கிராமியப் பாடல்கள்.

எம்.கே.முருகானந்தன். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 40 பக்கம், விலை: ரூபா 200., அளவு: