12816 – கலங்கரை விளக்க அடிவாரமும் ஏனைய கதைகளும்: சிங்கள சிறுகதைத் தொகுப்பு 1.

எம்.எச்.எம்.யாக்கூத், திக்வல்லை கமால், எஸ்.ஏ.சீ.எம்.கரமத் (மொழிபெயர்ப்பாளர்கள்). ஆனமடுவ: தோதென்ன வெளியீட்டகம், உஸ்வௌ வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2008. (கனேமுல்ல: ஜயன்ட் பிரின்ட் கிராப்பிக்ஸ், 52 A/1, கலஹிட்டியாவ).

viii, 9-264 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21 x 14 சமீ., ISBN: 978-955-1848-20-0.

இனங்களுக்கிடையேயான உறவை இலக்கியத்தின் வழியாக வலுப்படுத்தும் நோக்கில் 18 சிங்களச் சிறுகதைகள் இங்கு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. கலங்கரை விளக்கம், தேவன், தேன்மா, தாய், எனது அருமையான புனைகதைக்குக் குறுக்காக விழுந்துகிடந்த பிச்சைக்காரன், பாவப்பட்ட ஆவிகளின் கதை, மணிக்கல் தேடுவோர், பேய் பிசாசுகளின் இரவு, அத்தியாவசியப் பாவனைப் பொருட்கள், நண்பர்கள், இரத்த உறவினர்கள், எமக்கு விடிவு கிடைக்குமா?, விடுதலை, மறுபிறவி, தெய்யனே (ஆண்டவனே), மாட்டுவண்டி, உயரதிகாரியும் சிற்றூழியரும், வெள்ளைக்கொடி ஆகிய 18 கதைகள் இத்தொகுப்பில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 53295).

ஏனைய பதிவுகள்

14120 கனடா மொன்றியால் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக மலர்-1995.

மலர்க்குழு. கனடா: அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில், 71,Jean-Talon Quest Montreal,Quebec H2R 2X8 1வது பதிப்பு, 1995. (கனடா: குவாலிட்டி பிரின்டிங் சேர்விசஸ்). 120 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

14152 நல்லைக்குமரன் மலர் 2009.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2009. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). xii, 172+ (48) பக்கம், புகைப்படங்கள், தகடுகள்,

12885 – மொஸ்கோ அனுபவங்கள்.

ஆரையம்பதி க.சபாரெத்தினம். சென்னை 24: இளம்பிறை பதிப்பகம், 32-8 (375),ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், 1வது பதிப்பு, டிசம்பர் 2002. (சென்னை 600 024: இளம்பிறை பதிப்பகம்). 232 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா

12058 – தொடக்குந் தொடர்பும் அல்லது ஆசௌச விளக்கம்.

சி.அப்புத்துரை, சு.செல்லத்துரை. கொழும்பு 6: வி.மனோன்மணி, யாழ்.தெல்லிப்பழை விஜயரத்தினம் விமலநாதன் அந்தியேட்டித் தின வெளியீடு, 27/12, பரக்கும்பா பிளேஸ், 1வது பதிப்பு, ஜுலை 2002. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்). xxi, 56 பக்கம்,

14329 இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றம்: அரசியலமைப்புக்கான பதினேழாவது திருத்தம்.

இலங்கை அரசாங்கம். கொழும்பு: பாராளுமன்ற செயலகம், இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2001. (கொழும்பு: அரசாங்க அச்சுத் திணைக்களம்). 59 பக்கம், விலை: 49.25, அளவு 21×15 சமீ. இவ்வரசியலமைப்புச்