குடத்தனை உதயன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல. 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2014. (சென்னை 94: ஆதிலட்சுமி ஆப்செட்).
xii, 476 பக்கம், விலை: இந்திய ரூபா 300., அளவு: 21.5 x 14 சமீ.
யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி கிழக்கில் குடத்தனை கிராமத்தில் பிறந்தவர் உதயகுமார். புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் இப்படைப்பாளியின் முதற் படைப்பு 1998இல் வெளிவந்த ‘விழியோரத்துக் கனவு’ என்ற நாவலாகும். ஈழமுரசு பத்திரிகையில் தொடராக வெளிவந்த ‘விடியலைத்தேடி’, மற்றும் ‘விழியில் பூத்த நெருப்புகள்’ என்பன இவரது முன்னைய படைப்பாக்கங்களாகும். ‘இருளுக்குள்ளே ஒரு நம்பிக்கை வெளிச்சம்’ என்ற இந்த நாவல் ஐம்பது அத்தியாயங்களைக் கொண்டது. தமிழீழ மண்ணின் வாழ்வையும் அந்நிய மண்ணின் வாழ்வையும் துல்லியமாக முன்வைக்கும் நாவல் இது. தமிழீழ மண்ணில் தொடங்கும் இந்நாவல் ஈழத்தின் பல்வேறு நிலப்பரப்புகளையும் அந்நிலப்பரப்பில் வாழும் மக்களையும் வாழ்க்கையையும் மிகவும் எதார்த்தமாக சித்திரிக்கிறது. நாவலின் கதாபாத்திரங்கள் உயிர்ப்புடன் உலாவருகின்றன. மனித மனங்களுக்கிடையே உள்ள முரண்கள், நட்பு, பகை, அன்பு, வெறுப்பு என 894.8(41) மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் ஃ 894.8(5) தமிழ் நாவல்கள், குறுநாவல்கள் 458 நூல் தேட்டம் – தொகுதி 13 அனைத்தையும் வௌ;வேறு கதாபாத்திரங்களின் வாயிலாக வெளிப்படுத்தி இறுதியில் புகலிட தேசத்தில் நரேனின் தற்கொலையுடன் நாவல் நிறைவுபெறுகின்றது.