லதா உதயன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல. 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2015. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆப்செட்).
xiv, 166 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21 x 14 சமீ.
யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சியில் உள்ள சுப்பர்மடம் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட லதா உதயன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கவிதைத் துறையில் ஈடுபாடு மிக்க இவரது முதலாவது நூலாக ஒரு நதியின் தேடல் என்ற சிறுகதைத் தொகுப்பே வெளிவந்தது. தாய் மண்ணின் நினைவுகளையும் புலம்பெயர் வாழ்வின் அனுபவங்களையும் அழியாக் காதல் ஒன்றையும் கருவாக்கி இந்நாவலைப் படைத்துள்ளார். இவரது நாவல் உள்ளிட்ட அனைத்துப் படைப்புகளிலும் தாயக உணர்வினையும் தாய் மண்ணை இழந்து வந்த ஏக்கத்தையும் மண்ணின் மக்கள் அங்கு சுமக்கும் வலிகளையும் உணரமுடிகின்றது.