வி.ஜனகன். கொழும்பு: மஸ்ட்ரோ மயின்ட்ஸ் பிரைவேற் லிமிட்டெட், 1வது பதிப்பு, நவம்பர் 2016. (கொழும்பு: தேவி அச்சகம்).
170 பக்கம், விலை: ரூபா 325.00, அளவு: 21 x 14 சமீ., ISBN: 978-955-725-500-2.
‘உங்களை நீங்கள் விரைவில் அறிந்துகொள்ளத் தவறுவீர்களானால் வேறு ஒருவர் உங்களை தனது அடையாளத்திற்காக பயன்படுத்திக்கொள்வார்’ என்ற அறிவுரையை இந்நாவல் வழியாகச் சொல்லமுனைகிறார் இந்நாவலாசிரியர். யாழ். இந்துக் கல்லூரி, கொழும்பு இந்துக் கல்லூரி, கொழும்புப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கற்றுத்தேர்ந்து ஐனுஆ நிறுவனத்தில் பிரதம நிறைவேற்று அதிகாரியாகப் பணியாற்றும் ஜனகனின் இலக்கியப்பாதை பள்ளிப்பருவத்தில் கையெழுத்து நூல்களை எழுதுவதில் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிடுகின்றார். தற்கால இளைஞர்களை கவரும்வகையில் தமிழ் ஆங்கில உரைநடையில் கலந்து எழுதப்பட்டுள்ள நாவல் என்ற வகையில் இது வித்தியாசமானதொரு முயற்சி. உதாரணத்துக்குச் சில வரிகள்: ‘பொதுவாகவே மென்நிற ளாசைவகளை மட்டுமே விரும்பி அணியும் அனந்தயன் இன்றும் மெல்லிய நீலநிற ‘ஆயசம ரூ ளுpநnஉநச’ டிசயனெ ளாசைவ ஒன்றினை அணிந்திருந்தான். நிச்சயமாக அவன் டுழனெழn இற்குப் போனதே இல்லை. ஆனால் அந்த டுழனெழn டிசயனெ ளாசைவ இனை அவனுடைய நண்பனே டுழனெழn இல் இருந்து அவனுடைய பிறந்த நாள் பரிசாக அனுப்பியிருந்தான்’. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61520).