ஏ.ஏ.ஜெயராஜா. வத்தளை: எம்.எம். பப்ளிக்கேஷன்ஸ், 1026/3, ரைபிள் ரேஞ்ச் வீதி, ஹுணுப்பிட்டி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1991. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(6), 28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18 x 13 சமீ.
1986இல் எழுதப்பட்ட இந்நாவலில் ஒரு சிங்களப் போர்வீரன் யாழ்ப்பாணத்துத் தமிழ்ப் பெண்ணொருத்தியைக் காதலித்து, அவளை ஒரு குழந்தைக்குத் தாயாக்கிவிட்டு தன் ஊருக்கு வந்து வேறொரு சிங்களப்பெண்ணை மணந்து விடுகிறான். பின்னாளில் அந்தத் தமிழ்த் தாயின் மகனும், இந்தச் சிங்களப் போர்வீரனின் மகனும் வன்னிக் காடுகளில் எதிரெதிர் நிலைகளில் நின்று போரிட்டு ஒருவரை ஒருவர் கொல்லமுயல்கின்றனர். இறுதியில் சிங்களப் போர்வீரன் தன் தமிழ்ச் சகோதரனைக் கொன்றுவிட்டு, அவனது உடலைத் தன் தந்தையின் 894.8(5) தமிழ் நாவல்கள், குறுநாவல்கள் 464 நூல் தேட்டம் – தொகுதி 13 காதலியான அத்தமிழ்த்தாயிடம் ஒப்படைக்கிறான். இதுதான் கதையின் கற்பனை. இக்கதையின் துணைகொண்டு ஆசிரியர் மானிட வாழ்வின் அர்த்தங்களைத் தேட முயற்சித்துள்ளார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 000800).
போரும் மனிதனும். அனிஸ்டஸ் ஜெயராஜா. கொழும்பு 6: பூங்காற்றுப் பதிப்பகம், 59, 1/1, ஹைலெவல் வீதி, கிரில்லப்பனை, 2வது பதிப்பு,செப்டெம்பர் 2011, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1991. (அச்சக விபரம் தரப்படவில்லை).
xvi, 46 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 18 x 13 சமீ., ISBN: 978-955-0700-00-4.
இந்நூலில் முதற்பதிப்பு 1994 என்று தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நூலாசிரியர் திருக்கோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர். செகுவேரா, அப்பா ஆகிய நாவல்களை முன்னர் வழங்கியவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54051).