திருமலை வீ.என்.சந்திரகாந்தி. திருக்கோணமலை: ஜெயகாந்தி கலை கலாச்சார விளையாட்டு மேம்பாட்டுக் கழகம், 572/A, ஏகாம்பரம் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2004. (திருக்கோணமலை: ரெயினிபோ மினிலாப், 361, நீதிமன்ற வீதி).
200 பக்கம், விலை: ரூபா 150., 20.5 x 14.5 சமீ., ISBN: 955-98979-0-x.
குடும்பத் தலைவன் ஒழுக்கம் தவறுதலும் குடும்பத்தினரின் தீயோர் சேர்ககையும் தீமையையே அக்குடும்பத்தில் விளைவிக்கும் என்ற அறப்போதனையை இந்நாவல் வழங்குகின்றது. தொழில்புரி நிலையங்களில் புரையோடிக் கிடக்கும் ஆண்-பெண் மன அவசங்களை இக்கதை தெளிவாக வெளிப்படுத்துகின்றது. பல்வேறு திசைகளிலிருந்தும் நாவல் நகர்த்தப்படும் உத்தி கையாளப்பட்டிருக்கின்றது. ராஜநாதருக்கும் அவரது வங்கி ஊழியர் ஜுலிக்கும் இடையிலான முறையற்ற தொடர்பு அவரது முழுக் குடும்பத்தையும் சீரழித்து விடுவதே கதையின் கரு. திருக்கோணமலை நகரை கதைக்களமாகக் கொண்ட இந்நாவலில், வங்கி முகாமையாளர் ராஜநாதர், ஜுலி, நிலாவினி, சீதா ஆகிய பாத்திரங்கள் நாவலில் உயிரோட்டமாக அமைகின்றன. யாழ்ப்பாணம் அச்சுவேலியில் 28.12.1946இல் பிறந்த வீ.என்.சந்திரகாந்தி, திருக்கோணமலையைத் தன் வசிப்பிடமாக வரித்துக்கொண்டு திருமலை வீ.என்.சந்திரகாந்தியாக ஈழத்து இலக்கியத்துறையில் தடம்பதித்து வருபவர். இந்நாவலில் சுனாமி பற்றி எவ்வித செய்தியும் இல்லாத போதிலும், இந்நூல் உலகெங்கும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான காணிக்கையாக்கப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 153994CC).