12830 – உரைநடை விருந்து.

நூல் வெளியீட்டுக் குழு. சுன்னாகம்: வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 6வது பதிப்பு, 1957, 1வது பதிப்பு, 1953. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

(6), 118 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு: 18 x 12.5 சமீ.

இலங்கைக் கல்விச் சேவையில் எஸ்.எஸ்.சீ./எச்.எஸ்.சீ தரங்களில் பயிலும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில், தமிழறிஞர்களின் தமிழ் இலக்கியக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்துள்ள நூல். ஈழநாடும் தமிழகமும் (ரா. பி.சேதுப்பிள்ளை), ஊரைக் காத்த பாட்டி (சுத்தானந்த பாரதியார்), இரண்டு மனுஷர்கள் (சி.கணபதிப்பிள்ளை), சிந்தனா சக்திப் பயிற்சி 1 (பொ.திருகூடசுந்தரம்), சிந்தனா சக்திப் பயிற்சி 2 (பொ.திருகூடசுந்தரம்), இலங்கை ஆற்றுப்படை (சு.நடேசபிள்ளை), எனது யப்பான் யாத்திரை (ச.பேரின்பநாயகன்), இமயம் சேர்ந்த காக்கை (சுவாமி விபுலானந்தர்), கம்பர் காட்டும் பெண்கள் (கா. பொ.இரத்தினம்), யூலியஸ் சீசர் (வ.நடராஜன்) ஆகிய பத்துக் கட்டுரைகள் இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13608).

ஏனைய பதிவுகள்