12831 – சங்க காலம் முதல் சமகாலம் வரை: சி.மௌனகுருவுடனான நாடகம் தவிர்ந்த நேர்காணல்.

செ.யோகராஜா. மட்டக்களப்பு: மகுடம் வெளியீடு, இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

x, 124 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5 x 14.5 சமீ.

ஈழத்தின் இரு ஆளுமைகள் சந்தித்துக்கொண்ட உரையாடலின் தொகுப்பு. இதுகாலவரையில் கூத்துக்கலையின் ஆளுமையாகக் கருதப்பட்ட பேராசிரியர் சி.மௌனகுருவின் பன்முகப் பரிமாணம் இங்கே விரிகின்றது. மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக்கொண்ட சி.மௌனகுரு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது கலைமாணி, முதுமாணிப் பட்டங்களைப் பெற்றவர். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளோமா பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றவர். அரங்கியலுக்கு அப்பால் அவரது இன்னொரு முக்கிய பரிமாணம் கல்வித் துறை சார்ந்தது. இலங்கையில் முக்கியத் தமிழ்ப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் அவர் பணியாற்றி பங்களிப்புகள் செய்தாரென்பதோடு கிழக்குப் பல்கலைக்கழக உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் அவருக்குப் பிரதான பங்குண்டு. பேராசிரியரின் அடுத்த பரிமாணம் தமிழ் ஆய்வு சார்ந்தது. தமிழ் இலக்கிய வரலாறு, சங்க காலம் தவிர விபுலானந்தரின் கருத்துலகம் முதலான துறைகளில் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. நீலாவணன், சுபத்திரன் முதலான ஈழத்துக் கவிஞர்களைத் தொடர்ந்து பாரதிதாசனையும் தனது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளார். இவருடனான நேர்காணலில் கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைப் பேராசிரியர் செ. யோகராஜா நாடகம் தவிர்ந்த பிற சுவையான விடயங்களைத் தனது திறமையான தொடர்பாடலின் வழியாக வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

ஏனைய பதிவுகள்