12832 – சுதந்திரத்திற்குப் பின் இலங்கை: ஒரு பன்முகப் பார்வை.

ம.சண்முகநாதன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 98, வோட் பிளேஸ், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1998. (கொழும்பு 13: ஸ்பாட்டன் பிரெஸ், 154, ஆட்டுப்பட்டித் தெரு).

(6), 86 பக்கம், விலை: ரூபா 80., அளவு: 27 x 21.5 சமீ.

1998இல் இலங்கையில் பரவலாகக் கொண்டாடப்பட்ட இலங்கையின் சுதந்திரதினப் பொன்விழாவை (1948-1998) ஒட்டி வெளியிடப்பெற்ற கட்டுரைத் தொகுப்பு. இதில் சுதந்திரத்திற்குப் பின் இலங்கையின் பொருளாதார மாற்றங்கள் (நா.பாலகிருஷ்ணன்), இலங்கையின் சுதந்திரமும் மலையக மக்களின் அரசியல் நிலைப்பாடும் (சோ.சந்திரசேகரன்), இலங்கையில் சுதந்திரத்தின் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், மலையகத் தமிழ் மக்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்களும் விளைவுகளும் (மா.செ.மூக்கையா), கடந்த ஐந்து தசாப்த ஈழத்துத் தமிழ் நாவல் துறையில் ஏறபட்ட மாற்றமும் வளர்ச்சியும் (க.குணராசா), சுதந்திரத்திற்குப் பின் ஈழத்துக் கவிதை மாற்றமும் வளர்ச்சியும் (செ.யோகராசா), சமகால ஈழத்தமிழ்ச் சிறுகதைகள்-ஒரு பார்வை (ந.இரவீந்திரன்), இலங்கை சுதந்திரம் பெற்றபின் தமிழ் நாடகத்துறையில் ஏற்பட்ட மாற்றமும் வளர்ச்சியும் (காரை.செ.சுந்தரம்பிள்ளை), யோக சுவாமிகள் ஆன்மீக வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் (க.ந.வேலன்), பாரம்பரிய சமயமும் நவீன சமயமும் (குமாரசாமி சோமசுந்தரம்), அறநெறிக் கல்வியின் தேவையும் வளர்ச்சியும் (சாந்தி நாவுக்கரசன்) ஆகிய 10 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17450).

ஏனைய பதிவுகள்