12833 – செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய் (புனைவுக் கட்டுரை).

ஆ.சி. கந்தராஜா (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3டீ, 46வது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

xx, 112 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21 x 15 சமீ., ISBN: 978-955-8354-53-7.

‘ஆ.சி.கந்தராஜா என்ற அறிவியல் அறிஞனின் ஆக்கங்கள் நமக்கு அவசியம் வேண்டுபவை. அவை அறிவியலைக் கூற முனைந்தபோதும் அதனுள்ளே மொழி, பண்பாடு என்ற விடயங்கள் தேங்கி நிற்கின்றன. அவை இலகு நடையில் நகைச்சுவை கலந்து விளங்கவைப்பவை. அவற்றை வெறும் அறிவியலாகவோ அல்லது புனைவாகவோ கொள்ள முடியவில்லை. இரண்டும் கலந்த கலவை. அறிவியல் உண்மைகளைத் தான் சார்ந்த பண்பாட்டுக் கோலங்களை மிக நுணுக்கமாகப் பயன்படுத்தி அந்த பண்பாட்டிற்கேயுரிய மொழி வழக்குகளைச் சேகரம் செய்தும் பதிவிட்டும் தருகின்ற புதிய புனைவு உத்தி, புதிய வரவு இது’ (வ.மகேஸ்வரன், முன்னுரையில்). இந்நூலில் ஆசிரியரின் புனைவுக்கட்டுரைகளான செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக்கத்தரிக்காய், ஒட்டுக் கன்றுகள், மரங்களும் நண்பர்களே, வீரசிங்கம் பயணம் போகிறார், விலாங்கு மீன்கள், என்.பி.கே., மைனாக்கள், தம்பித்துரை அண்ணையும் பேரனும் ஐந்து ஐமிச்சங்களும் ஆகிய எட்டு படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

12217 – நிவேதினி: பால்நிலைக் கற்கை நெறிச் சஞ்சிகை: இதழ் 16 (2014-2015).

செல்வி திருச்சந்திரன் (இதழாசிரியர்). கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58 தர்மராம வீதி, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). x, 126

12304 – கல்விக் கொள்கையும் முகாமைத்துவமும்.

மா.செல்வராஜா. மகரகம: கல்வி முகாமைத்துவ அபிவிருத்தித்துறை, தேசியகல்வி நிறுவகம், 2வது திருத்திய பதிப்பு, 1997, 1வது பதிப்பு, 1995. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 1-B, P.T. டீ சில்வா மாவத்தை). iv, 128 பக்கம், விளக்கப்படங்கள்,

12737 – இலக்கிய மஞ்சரி : ஐந்தாம் புத்தகம்.

வ.நடராஜன், கனக செந்திநாதன். சுன்னாகம்: வட இலங்கைத் தமிழ் நூற் பதிப்பகம், திருத்திய 7வது பதிப்பு, 1961, 1வது பதிப்பு, 1947, திருத்திய 6வது பதிப்பு, 1959. (யாழ்ப்பாணம்: திருமகள் அழுத்தகம், சுன்னாகம்). viii,

12518 – வணிகக் கல்வி: உயர்தர வகுப்புகளுக்குரியது:

வங்கிகளும் வங்கித் தொழிலும். சு.இராஜகிருஷ்ணர் இரகுநாதன். கண்டி: பவளரத்ன பப்ளிக்கேஷன்ஸ், 396/12டீ, பேராதனை வீதி, 2வது பதிப்பு, ஜனவரி 2001, 1வது பதிப்பு, ஜுன் 1993. (கொழும்பு 15: கலர் பிரின்ட்ஸ், 712, பு;மெண்டால்