12833 – செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய் (புனைவுக் கட்டுரை).

ஆ.சி. கந்தராஜா (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3டீ, 46வது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

xx, 112 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21 x 15 சமீ., ISBN: 978-955-8354-53-7.

‘ஆ.சி.கந்தராஜா என்ற அறிவியல் அறிஞனின் ஆக்கங்கள் நமக்கு அவசியம் வேண்டுபவை. அவை அறிவியலைக் கூற முனைந்தபோதும் அதனுள்ளே மொழி, பண்பாடு என்ற விடயங்கள் தேங்கி நிற்கின்றன. அவை இலகு நடையில் நகைச்சுவை கலந்து விளங்கவைப்பவை. அவற்றை வெறும் அறிவியலாகவோ அல்லது புனைவாகவோ கொள்ள முடியவில்லை. இரண்டும் கலந்த கலவை. அறிவியல் உண்மைகளைத் தான் சார்ந்த பண்பாட்டுக் கோலங்களை மிக நுணுக்கமாகப் பயன்படுத்தி அந்த பண்பாட்டிற்கேயுரிய மொழி வழக்குகளைச் சேகரம் செய்தும் பதிவிட்டும் தருகின்ற புதிய புனைவு உத்தி, புதிய வரவு இது’ (வ.மகேஸ்வரன், முன்னுரையில்). இந்நூலில் ஆசிரியரின் புனைவுக்கட்டுரைகளான செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக்கத்தரிக்காய், ஒட்டுக் கன்றுகள், மரங்களும் நண்பர்களே, வீரசிங்கம் பயணம் போகிறார், விலாங்கு மீன்கள், என்.பி.கே., மைனாக்கள், தம்பித்துரை அண்ணையும் பேரனும் ஐந்து ஐமிச்சங்களும் ஆகிய எட்டு படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Gokkasten Acteren

Volume Bonussen Pro Online Gokautomaten Onz Dierbaar Offlin Casino’s Pro Gokkasten In Echt Geld Om Mei, 2024 Bedragen Daar Zowel Online Gokkasten Over Ideal? Toch