க.நவம். வல்வெட்டித்துறை: நான்காவது பரிமாணம், தெணியகம், பொலிகண்டி, 1வது பதிப்பு, 2017. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
116 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 18.5 x 13 சமீ., ISBN: 978-955-7295-03-9.
உலகப் பொது விடயங்கள் பலவற்றையும் சாதாரண வாசகனும் படித்துப் பயனுறும் வகையில் சிக்கலின்றி இலகு தமிழில் பேசும் நூல் இது. முழு மானுடத்தினதும் முன்னேற்றம், மேம்பாடு, அபிவிருத்தி என்பன குறித்து அக்கறையுடன் அலசி ஆராயும் ஒரு நூல். அடையாளம், பண்பாட்டு அபகரிப்பு, மாஸ்ரர் படும் பாடு, கனடாவில் பன்முகப் பண்பாடு: ஒரு நாற்பது வருட நடைப்பயணம், கேடாகிப் போன கேலிச்சித்திரம், ஈழத்தமிழ்க் கனடியர்களின் தவிப்பும் தன்முனைப்பும், நேசித்தால் நெஞ்சிலிருப்பேன் தூஷித்தால் நினைவிலிருப்பேன், சாமானிய நோக்கில் சமஷ்டி, பால்- நிறம்- வெள்ளை, தமிழரின் சமூக ஊடாட்டங்களில் உடல் பற்றிய கருத்தியல், கறுப்பு உயிர்களும் உயிர்களே, தீவிரவாதமும் தீக்கோழி மனோபாவமும் ஆகிய பன்னிரண்டு கட்டுரைகளை ஆசிரியர் இந்நூலில் தொகுத்தளித்திருக்கின்றார்.