12836 – தமிழ்க் கலைக் கோவை.

கலைவாணி பதிப்பகம். யாழ்ப்பாணம்: கலைவாணி புத்தக நிலையம், 1வது பதிப்பகம், பெப்ரவரி 1962. (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம்).


176 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 18 x 12 சமீ.

கலைவாணி புத்தக நிலையத்தினரால் தொகுக்கப்பெற்ற கட்டுரைத் தொகுப்பு இது. இதில் அருவி ஓசை (கி.வா.ஜகந்நாதன்), தமிழ்நாட்டில் ஓவியக்கலை (க.நவரத்தினம்), தமிழர் பண்பாடு-ஆடையும் அணியும் (ரா.பி.சேதுப்பிள்ளை), அறிவியல் (பெ.நா.அப்புஸ்வாமி), காப்பியக் கவிஞர் வீரமாமனிவர் (தனிநாயக அடிகள்), சீதை (இரத்தினம் நவரத்தினம்), பண்டை விளையாட்டுக்கள் (கோ. சுப்பிரமணியபிள்ளை), ஐயோ யமனே (அ.ச.ஞானசம்பந்தன்), முத்தமிழ் (வி. கோ.சூரியநாராயண சாஸ்திரி), புறநானூற்றில் ஒரு பாட்டு (வி.செல்வநாயகம்), பொத்தகுட்டன் (மயிலை-சீனி வெங்கடசாமி), உருசியாவின் கல்வித் திட்டம் (கா.பொ.இரத்தினம்), சிறு கதை (அகிலன்), நாட்டுக்கூத்து (அருள். செல்வநாயகம்), தமிழ்நாட்டுப் பெண்பாலார் (உ.வே.சாமிநாத ஐயர்), மக்கள் கடமை (மறைமலை அடிகள்), பொற்கொல்லன் (ஆ.சிவலிங்கனார்) ஆகிய தேர்ந்த 17 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.(இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2596).

ஏனைய பதிவுகள்