ஆ.வடிவேலு. பருத்தித்துறை: ஆ.வடிவேலு, ஓய்வுநிலை அதிபர், 1வது பதிப்பு, ஆனி 2013. (பருத்தித்துறை: தீபன் பதிப்பகம், பிரதான வீதி).
xxx, 108 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20 x 14 சமீ., ISBN: 978-955-44548-1-1.
திருக்குறள் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளை உள்ளடக்கிய நூல் இது. அறநூல் களைப் படிப்பதிலிருந்து பின்வாங்கிவரும் ஒரு இளைய தலைமுறையினரை மீளவும் அந்நூல்களின்பால் அக்கறைகொள்ளச்செய்யும் நோக்கம் இந்நூலின் 894.8(6) பொது இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வு நூல் தேட்டம் – தொகுதி 13 469 உருவாக்கத்தின் பின்புலமாயமைந்துள்ளது. இவ்விரண்டாம் பாகத்தில் தேர்ந்தெடுத்த 27 குறள்களைக் கொண்ட ஆய்வுக் கட்டுரைகள் உள்ளன. அறத்துப்பாலில் 17 குறள்களும் பொருட்பாலில் 10 குறள்களும் எடுத்தாளப் பட்டுள்ளன. குறள் கூறுகின்ற அறிவுரைகளும், அறவுரைகளும் அறிவை வளர்ப்பதோடு, ஒழுக்கத்தையும் வாழ்க்கை நலத்தையும் உயர்த்தும் தன்மை வாய்ந்தவை. அந்தக் குறள்நெறிகளைப் புரிந்துகொண்டு வாழ்வை வளமாக்க இந்நூல் உதவுகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 53207).