12839 – திருக்குறள் நெறியில் இலக்கியச் சிந்தனைகள்.

நா.நல்லதம்பி. சாவகச்சேரி: நா.நல்லதம்பி, மட்டுவில் வடக்கு, 1வது பதிப்பு, ஜனவரி 2011. (கொழும்பு 11: அனுஷ் பிரின்டர்ஸ்).

xiv, 153 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 19 x 12.5 சமீ.

தென்மராட்சி- மட்டுவில் கிராமத்தில் 1928இல் பிறந்த ஆசிரியதீபம் நா.நல்லதம்பி, ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் நன்கறியப்பெற்ற மூதறிஞர். ‘இலக்கிய அமுதம்’ முதலான பன்னூலாசிரியர். இந்நூலில் இல்லச் சிறப்பு முதல் காதலும் கண்ணும் என்பது வரை ஐம்பது தலைப்புகளில் திருக்குறளின் புலமைக் கருத்துக்கள் காணப்படுகின்றன. குறள்களின் துணைகொண்டு எழுதப்பட்ட இக்கட்டுரைகளில் புராணங்கள், இதிகாசங்கள், காப்பியங்கள், நீதிக்கதைகள், முதலானவற்றின் உயரிய கருத்துக்களும் பொருத்தமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அறநூல்களைப் படிப்பதிலிருந்து பின்வாங்கிவரும் ஒரு இளைய தலைமுறையினரை மீளவும் அந்நூல்களின்பால் அக்கறைகொள்ளச்செய்யும் நோக்கம் இந்நூலின் உருவாக்கத் தின் பின்புலமாயமைந்துள்ளது. இந்நூலில் எடுத்தாளப்பட்டுள்ள குறட்பாக்களும் பெரும்பாலும் எமது அன்றாட வாழ்வோடு தொடர்புபட்டவையாக அமைந்துள்ளன. இந்நூல் ஆசிரியதீபம் நா.நல்லதம்பி, திருமதி ந.இரத்தினபூரணம் ஆகியோரின் பவளவிழாவையொட்டி வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்