12842 – தேம்பாவணி இரட்சணிய யாத்திரிகம் இயேசு புராணமாதிய மூன்று கிறித்தவ இலக்கிய நூல்களின் நூல் ஆராய்வு.

ஈழத்துப் பூராடனார் (இயற்பெயர்: க.தா. செல்வராஜகோபால்). கனடா: சீவன் பதிப்பகம், இல. 3, 1292 Sherwood Mills Blvd,Mississauga L5V1S6, Ontario,1வது பதிப்பு, 2009. (கனடா: ரீ கொப்பி, டொரன்டோ).

xxxviஇ 312 பக்கம், விலை: கனேடிய டொலர் 35., அளவு: 21 x 14 சமீ.

தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம், இயேசு புராணம் ஆகிய மூன்று கிறித்தவ இலக்கியங்களையும் விரிவாக ஆய்வுசெய்து தனி நூலாக ஆசிரியர் வழங்கியிருக்கிறார். நான் கண்ட தேம்பாவணி, முதலாவது வீரமாமுனிவரின் தேம்பாவணி, தேம்பாவணி இலக்கிய நூலாராய்வு, தேம்பாவணி நூல் வரலாற்று ஆய்வு, தேம்பாவணி நூல் ஆசிரியர் வரலாறு, தேம்பாவணி நூற்பதிப்பு வரலாற்று ஆராய்வு, தேம்பாவணி நூலடக்கப் பொது ஆராய்வு, தேம்பாவணி முதற் காண்ட ஆராய்வு, தேம்பாவணி இரண்டாம் காண்ட ஆராய்வு, தேம்பாவணி மூன்றாம் காண்ட ஆராய்வு, முடிவுரை பற்றிய ஆராய்வு என தேம்பாவணியின் பல்வேறு கூறுகளையும் தனித்தனி இயல்களாகப் பிரித்து ஆய்வுசெய்துள்ளார். அவ்வாறே இரண்டாவது கிறிஸ்தவக் கம்பனின் இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய யாத்திரிக இலக்கிய நூல்ஆராய்வு, இரட்சணிய யாத்திரிக நூலாராய்வு, நூலாசிரியர் வரலாற்று ஆராய்வு, இரட்சணிய யாத்திரிக பருவங்களின் ஆராய்வு, இரட்சணிய நூல் ஆராய்வின் முடிவுரைத் தொகுப்பு எனப்பகுத்து இரட்சணிய யாத்திரிகத்தை ஆராய்ந்துள்ளார். இறுதியாகத் தான் எழுதிய இயேசுபுராணத்தையும் ஆய்வுசெய்துள்ளார். ஈழத்துப் பூராடனாரின் இயேசு புராணம், இயேசு புராண இலக்கிய நூல் ஆராய்வு, இயேசு புராண நூல் நூற்பதிப்பு பற்றிய ஆராய்வு, பரமபிதாப் பருவ நூலாராய்வு, பரமசுதன் பருவம், பரிசுத்தாவிப்பருவ நூலாராய்வு ஆகிய தலைப்புகளில் இவ்வாய்வை மேற்கொண்டு இறுதியில் நூலாராய்வுகளின் முடிவுரை, ஒரு படைப்பாளியின் தகவல் ஆராய்வு ஆகிய இயல்களில் அனைத்தையும் தொகுத்துக்கூறியுள்ளார். அமரர் நா.சா.கதிர்காமத்தம்பி நினைவு நிதிய ஆதரவில் வெளிவரும் இது ஒரு நிழல் வெளியீடு. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47042).

ஏனைய பதிவுகள்

On the web Fruit Slots

Blogs Igt All the Computers Just how do Slots Performs? What Issues Can i Imagine When selecting An on-line Gambling establishment To possess Slot Betting?