12843 – பண்டைத் தமிழர் சிந்தனை மரபு.

சமரபாகு சீனா உதயகுமார். பருத்தித்துறை: அமரர் தங்கம்மா முத்துக்கிருஷ்ணன் ஞாபகார்த்த வெளியீடு, பொலிகண்டி, 1வது பதிப்பு, மே 2017. (ஊரெழு: சிறீலட்சுமி பிரின்டர்ஸ், பலாலி வீதி).

xviii, 68 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5 x 14.5 சமீ., ISBN: 978-955-43155-4-3.

இந்நூலில் பழந்தமிழ்ப் பாடல்களில் கணிதம், சிங்ககத்தீவு, ‘கள்’ பெற்ற சிறுவாழ்வு, ஒரு பாடல்-ஒரு குறள்-சில பழமொழிகள், துளிப்பா இலக்கியம், தொடைகள், விவேக கணிதம் ஆகிய ஏழு கட்டுரைகள் அடங்கியுள்ளன. தமிழ் தொடர்பாகவும் தமிழர் தொடர்பாகவும் பல விடயங்களைச் சொல்லிச்செல்லும் ஆசிரியர் பல்வேறு விடயங்களிலும் மரபாகச் சொல்லப்படும் விடயங்களிலிருந்து மாறுபடுகிறார். அதுவே இக்கட்டுரைத் தொகுப்பின் சிந்தனைக்கான திறவுகோல். இன்றைய புதிய தலைமுறை ஆய்வாளர்களுக்கும் முன்மாதிரியாக விளங்கக்கூடியவை இத்தொகுப்பிலுள்ள இவரது கணிதம் தொடர்பான கட்டுரை களாகும். இவை பண்டைய எமது தமிழ்ப் புலவர்களின் அறிவியலில் புலமைத்துவத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளன.

ஏனைய பதிவுகள்

Casinos Sportsbooks Web based poker

Posts Caesars Sportsbook app Unlimited betting advertisements is actually destroying sensation of enjoying sports What forms of playing knowledge should i come across at the

16080 சைவப்பிரகாசிகை : 3ம் புத்தகம். ச.குமாரசுவாமிக் குருக்கள்.

அச்சுவேலி : ச.குமாரசுவாமிக் குருக்கள், மனேச்சர், சரஸ்வதி வித்தியாசாலை, 5வது பதிப்பு, மாசி 1956. (பருத்தித்துறை: சிவஸ்ரீ வைத்தீசுவரக் குருக்கள், கலாநிதியந்திரசாலை). (4), 56 பக்கம், விலை: 60 சதம், அளவு: 19×14 சமீ.

10847 திறந்த கதவு: சிறுகதைகள்.

கமல் பெரேரா (சிங்கள மூலம்), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், இல. 675, பி.டி.எஸ். குலரத்ன மாவத்தை, 1வது பதிப்பு, 2009. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).