12844 – பல நாடுகளில் வசிக்கும் வாசகர்களுக்குப் பயனுள்ள குறிப்புகள்.

கே.எஸ். சிவகுமாரன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல. 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2013. (சென்னை 94: பி.வி.ஆர். ஆப்செட்).

(4), 64 பக்கம், விலை: இந்திய ரூபா 35., அளவு: 18 x 12.5 சமீ.

ஈழத்தின் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன் எழுதிய 17 கட்டுரைகளின் தொகுப்பு. க.நா.சு.வின் ஆக்கப் படைப்புகள், குசயnஉண முயகமய (பிரான்ஸ் க/ப்கா), க/ப்காவின் கதைகளும் தத்துவமும், வைதீக இந்துக்களும் மார்க்சிய கண்டனமும், ளுயுயுசுஊ நாடுகளின் இலக்கியத் தொகுதிகள், கே.ஜீ.மகாதேவா, பேனா மனோகரன், புத்தகக் காட்டில் அல்லலுறல், கற்பனாவாதத் தவிப்பு, முற்போக்கு எழுத்தாளர்கள், புதிய திறனாய்வாளர்கள்-விமலன், யாழ்ப்பாண மக்களின் வாழ்வியல் கோலங்கள், திரைப்பட விமர்சனம்: ஒரு புதிய கண்டுபிடிப்பு, மனமோகி, பூங்காவனம், சத்தியனின் சிரத்தை, நாட்டார் இலக்கியம்-அனார் ஆகிய தலைப்புகளில் இக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54657).

ஏனைய பதிவுகள்