12848 – யோகிஸ்ரீ சுத்தானந்த பாரதியாரின் பாரத சக்தி மகா காவியத்தில் ஒரு ஆய்வுக் கண்ணோட்டம்.

ஈழத்துப் பூராடனார். கனடா: சீவன் பதிப்பகம், இல. 3, 1292 Sherwood Mills Blvd, Mississauga L5V1S6, Ontario, 1வது பதிப்பு, 2007. (கனடா: ரீ கொப்பி).

xxiv, 2081+4 பக்கம், விலை: கனேடிய டொலர் 20., அளவு: 21 x 14 சமீ.

பாரதசக்தி மகாகாவியம் கவியோகி சுத்தானந்த பாரதியால் இயற்றப்பட்ட ஒரு பெருங்காவியம் ஆகும். இது ஐம்பதாயிரம் அடிகளால் ஆனது. இக்காவியம், 894.8(6) பொது இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வு நூல் தேட்டம் – தொகுதி 13 475 சித்தி காண்டம், கௌரி காண்டம், சாதன காண்டம், தானவ காண்டம், சுத்த சக்தி காண்டம் என்னும் ஐந்து காண்டங்களைக் கொண்டது. இக்காவியம் படலம் என்னும் அமைப்பினைக் கொண்டது. ‘மங்கல வாழ்த்துப் படலம்’ முதல் ‘சுத்தவாணிப் படலம்’ ஈறாக 147 படலங்களைக் கொண்டுள்ளது. கலிவிருத்தம், கலித்துறை, ஆசிரிய விருத்தம், நேரிசை, இன்னிசை, ஆசிரியப்பா, குறள் வெண்பா ஆகிய பலவகை யாப்பு வடிவங்கள் இக்காப்பியத்தில் கையாளப்பட்டுள்ளன. இக்காப்பியத்தில் இராமதாசர், குருநானக், சொராஷ்டிரர், இராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், கௌதம புத்தர், மகாவீர், இயேசுநாதர், நபிகள் நாயகம், கபீர்தாசர், வேத முனிவர்கள், தயானந்த சரசுவதி, ஆதி சங்கரர், மெய்கண்டார், அப்பர், மாணிக்கவாசகர், வள்ளலார், அரவிந்தர், சிவானந்தர் ஆகிய ஆன்மிகப் பெருமக்களின் வாழ்வும் பிம்பிசாரர், அசோகர், அண்ணல் காந்தியடிகள் உள்ளிட்ட பல வரலாற்று மாந்தரின் வாழ்வும் இடம்பெறுகிறது. தொடர்ந்து கதை இருபதாம் நூற்றாண்டில் நடப்பதாய் ஆரம்பிக்கிறது. கதை நன்மைக்கும் தீமைக்கும் இடையில் போராட்டத்தில் இறுதியில் தீமையைத் திருத்தி நன்மை வெல்வதாய் அமைகிறது. இதன் முதல் பதிப்பு 1948லும் விரிவுபடுத்தப்பட்ட இரண்டாம் பதிப்பு 1969லும் வெளிவந்தன. மக்கள் அனைவரும் சாதி, சமய, இன, மொழி வேற்றுமை இன்றிச் சன்மார்க்க நெறியில் சமயோக வாழ்வு பெறுவதை நோக்கமாக இக்காப்பியம் முன்னெடுத்துச் செல்கிறது. இச்சமயோகம் பற்றி இந்நூலில் பல இடங்களிலும் பேசப்பட்டுள்ளது. தொரன்ரோசிறகு மாசிகையில் ஈழத்துப் பூராடனார் தொடர்ந்து 23 அத்தியாயங்களில் எழுதிவந்த பாரதசக்தி மகாகாவியத்தின் கண்ணோட்டம் இங்கு தனிநூலாக வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 44295).

ஏனைய பதிவுகள்

12456 – உடுப்பிட்டி மகளிர் கல்லூரி 125ஆவது ஆண்டு விழா மலர் 1868-1993.

ச.வேலுப்பிள்ளை (மலராசிரியர்). பருத்தித்துறை: உடுப்பிட்டி மகளிர் கல்லூரி,உடுப்பிட்டி, 1வது பதிப்பு, மே 1995. (பருத்தித்துறை: குமார் அச்சகம்). (38), 138 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27.5×22 சமீ. 1993ஆம் ஆண்டு மே மாதம்

como apostar no estrela be

como apostar no estrela bet O que é Jogo do Bicho? Como funciona? Content Código promocional 1xbet: 1XAPOSTA até R$1.560 de bônus Se cadastrando para

12109 – திருத்தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் மஹா கும்பாபிஷேக விழாச் சிறப்பு மலர்

1999. வே. வரதசுந்தரம் (மலர் ஆசிரியர்). தம்பலகாமம்: அறங்காவலர் அவை, ஆதிகோணநாயகர் கோயில் தேவஸ்தானம், 1வது பதிப்பு, ஜுன் 1999. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). 68 பக்கம், புகைப்படங்கள்,