நவரட்ணம் குகபரன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xiv, 190 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 600., அளவு: 21.5 x 14.5 சமீ., ISBN: 978-955-659-544-4.
யாழ்ப்பாண மன்னர்கள் காலம் வரை தவழ்ந்துவந்த ஈழத்து இலக்கிய வரலாற்று ஆய்வு முயற்சிகள் ஒல்லாந்தர் காலத்திலே தான் மெல்ல மெல்ல எழுந்து நடக்க முயற்சிக்கிறது. இந்த முயற்சிக்கு நடைவண்டி கொடுத்து உதவுவதாகக் குகபரனின் நூல் அமைகின்றது. ஒல்லாந்தர் கால அரசியற் பின்னணியை நன்கு விளங்கிக் கொண்ட இந்நூலாசிரியர், அக்காலத் தமிழ் மக்களின் கல்வி, கலை, பண்பாடு, 894.8(6) பொது இலக்கியக் கட்டுரைகள், திறனாய்வு / 894.8(62) இலக்கிய வரலாறுகள் தொழில் முயற்சிகள், குடியேற்றங்கள், சமூக அடுக்கமைவு, புலமைத்துவத் தொடர்புகள் முதலான பல்வேறு விடயங்களையும் நுணுக்கமாக ஆய்வுசெய்துள்ளார். ஈழத்து இலக்கிய வரலாற்றைத் துலக்க முயலும் ஆய்வாளர்களுக்கு உதவும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்நூலின் தகவல்கள் ஈழத்தமிழரின் வரலாற்றுப் பின்னணி, சமயமும் சமூக அரசியலும், மரபுகளும் வழக்காறுகளும், கலைகள், அதிகார அடுக்கமைவு ஈழமும் இந்தியத் தொடர்பும், மதிப்பீடு ஆகிய ஏழு அத்தியாயங்களில் விரிகின்றன. இந்நூலாசிரியர் யாழ்ப்பாணம் சித்தன்கேணியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி கற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலைமாணிச் சிறப்புப் பட்டத்தினையும் முதுதத்துவமாணிப் பட்டத்தினையும் பெற்றுக் கொண்டவர். கல்விப்பின் படிப்பு டிப்ளோமாவை இலங்கைத் திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் பெற்று கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றுகின்றார்.