12853 – இஸ்லாமும் கவிதையும்.

எஸ்.எச்.ஆதம்பாவா. சாய்ந்தமருது 4: கலமுஷ்-ஷர்க் வெளியீடு, ‘வரித மஹால்’, 1வது பதிப்பு, ஜுன் 1987. (கல்முனை: அஸீஸ் பிரின்டிங்).

(16), 46 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5 x 12.5 சமீ.

அல்-ஹாஜ் மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா எழுதி வெளியிட்ட முதல் நூலாகும். இதுவே கலமுஷ் ஷர்க் எனும் பெயரில் அவரால் நிறுவப்பட்ட வெளியீட்டுப் பணியகத்தின் முதல் நூலாகவும் இந்நூல் அமைகின்றது. இஸ்லாத்தின் வரம்புகளை மீறாமல் முஸ்லீம்கள் கவிதை எழுத முடியுமா எனக் குரல் எழுப்பும் நூல் இது. இஸ்லாம் கவிதை போன்ற இலக்கிய வடிவங்களை ஆதரிக்கின்றதா என்பதை ஆய்வு செய்வதே இந்நூலின் நோக்கமாகும். இஸ்லாம் எவ்வாறான கவிதைகளை ஆதரிக்கின்றது, எவற்றை வெறுக்கின்றது என்பதை விபரிப்பதுடன் இஸ்லாமிய இலக்கியத்துக்கான ஒரு வரையறையும் இந்நூல் வழங்குகிறது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23807).

ஏனைய பதிவுகள்

12904 – சைவத் தமிழர்களின் கலங்கரை விளக்கம்.

ஆறு. திருமுருகன். கொழும்பு 4: இந்துப் பண்பாட்டு நிதியம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம், மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு, 248, 1ஃ1, காலி வீதி, 1வது

12775 – கிளுவம் வேலியும் கிடுகுத் தட்டியும்: கவிதைத் தொகுப்பு.

வேலணையூர் சுரேஷ் (இயற்பெயர்: இராமச்சந்திரன் சுரேஷ்). யாழ்ப்பாணம்: வர்ணம் கிரியேஷன்ஸ், அளவெட்டி, 1வது பதிப்பு, நவம்பர் 2015. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரின்டர்ஸ், 103, பலாலி வீதி). xxvii, 100 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

14057 வெசாக் சிரிசர 2005

ராஜா குருப்பு (பதிப்பாசிரியர்), த.கனகரத்தினம் (உதவிப் பதிப்பாசிரியர்). கொழும்பு 7: வெசாக் சிரிசர வெளியீட்டுக் குழு, அரச சேவைகள் பௌத்த சங்கம், 90/15, வீரவ பிளேஸ், றாகம வீதி, கடவத்தை, 1வது பதிப்பு, மே

12452 – இணுவில் இந்து: 150ஆவது ஆண்டு நிறைவு சிறப்பு மலர் 1864-2014.

தி.சசீதரன் (மலர் ஆசிரியர்). யாழ்ப்பாணம்: இணுவில் இந்துக் கல்லூரி, இணுவில், 1வது பதிப்பு, மே 2015. (சுன்னாகம்: மகிந்தன் கணனி அச்சகம்). xxxix,182 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.

14668 கிறிஸ்துவின் அருள் வரங்களும் தெய்வீக வெளிப்பாடுகளும் (நாடகங்கள்).

ஈழத்துப் பூராடனார் (மூலம்), எட்வேட் இதயச்சந்திரா (தொகுப்பாசிரியர்). கனடா: நிழல் வெளியீடு, ஜீவா பதிப்பகம், 1108 Bay Street, Toronto, Ontario M5S 2W9 1வது பதிப்பு, ஒக்டோபர் 1992. (கனடா: ஆணர்ல்ட் அருள்,

12179 – யாழ்.திருநெல்வேலி முத்துமாரியம்பாள் அருள்நிதியம்.

சி.அப்புத்துரை (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: குப்பிழானூர் அம்பலவாணர் நடராசா நினைவு மஞ்சரி, குப்பிழான், 1வது பதிப்பு, மார்ச் 2006. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்). 136 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ. கலாபூஷணம்