12853 – இஸ்லாமும் கவிதையும்.

எஸ்.எச்.ஆதம்பாவா. சாய்ந்தமருது 4: கலமுஷ்-ஷர்க் வெளியீடு, ‘வரித மஹால்’, 1வது பதிப்பு, ஜுன் 1987. (கல்முனை: அஸீஸ் பிரின்டிங்).

(16), 46 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5 x 12.5 சமீ.

அல்-ஹாஜ் மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா எழுதி வெளியிட்ட முதல் நூலாகும். இதுவே கலமுஷ் ஷர்க் எனும் பெயரில் அவரால் நிறுவப்பட்ட வெளியீட்டுப் பணியகத்தின் முதல் நூலாகவும் இந்நூல் அமைகின்றது. இஸ்லாத்தின் வரம்புகளை மீறாமல் முஸ்லீம்கள் கவிதை எழுத முடியுமா எனக் குரல் எழுப்பும் நூல் இது. இஸ்லாம் கவிதை போன்ற இலக்கிய வடிவங்களை ஆதரிக்கின்றதா என்பதை ஆய்வு செய்வதே இந்நூலின் நோக்கமாகும். இஸ்லாம் எவ்வாறான கவிதைகளை ஆதரிக்கின்றது, எவற்றை வெறுக்கின்றது என்பதை விபரிப்பதுடன் இஸ்லாமிய இலக்கியத்துக்கான ஒரு வரையறையும் இந்நூல் வழங்குகிறது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23807).

ஏனைய பதிவுகள்

12421 – தாரகை – இதழ்19:2015.

சி.ஸஹானா, பா.ஸாஹிரா (இதழாசிரியர்கள்). கொழும்பு: வுல்வெண்டால் பெண்கள் உயர்தரப் பாடசாலை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 177 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,

14263 பால்நிலை சமத்துவத்தை நோக்கிய ஆண்களின் பயணம்.

ஜோ.கருணேந்திரா, து.கௌரீஸ்வரன், சு.நிர்மலவாசன், சி.ஜெயசங்கர், கமலாவாசுகி (தொகுப்பாசிரியர் குழு). மட்டக்களப்பு: மூன்றாவது கண், உள்ளூர் அறிவுத்திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழு, இல.30, பழைய வாடிவீட்டு வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2014. (அச்சக விபரம்