ஏ.பீ.எம். இத்ரீஸ். வாழைச்சேனை 05: உயிர்ப்பைத் தேடும் வேர்கள், மஹ்மூத் ஆலிம் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2005. (அச்சக விபரம் தரப்படவில்லை).
88 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21 x 14.5 சமீ.
தாகம் தீராத பாலை நிலத்தைப் போன்றே பிரச்சினைகளும் தீர்வுகளும் இருக்கின்றன. நீர் புகட்டப்படும் போதெல்லாம் இன்னும் நீர் கேட்டுக்கொண்டே இருக்கின்றது. பாலையின் தாகம் தீர்வதில்லை என்பதைப்போல் எமக்குத் தேவையான சமூக மாற்றமும் இன்னும் நிகழவில்லை. மனித இன வரலாற்றில் செயலூக்கத்துடன் தலையிட்டவர் என்ற வகையில் நபிகளாரின் சீறாவில் இயங்கிவந்த விதிகளையும் உண்மைகளையும் இந்நூல் தொகுத்தாய்வு செய்கின்றது. முன்னுரை, வரலாறும் இயங்கியலும், சீறாவில் மாறாததும் மாறக் கூடியதும். ஒவ்வொரு நபிக்கும் ஓர் எதிரி உண்டு, பொதுக் குறிக்கோளும் கிளை இலட்சியங்களும், முதன்மையான இலக்கைத் தேர்வுசெய்தல், சமகால கிளைக் குறிக்கோள்கள், முறைவழிகளின் பன்மையும் வகைமையும், சீறாவில் சமூகமாற்றமுறை வழிகள், மக்கா காலகட்ட முறைவழி, மதினா காலகட்ட முறைவழி, சீறாவும் வன்முறையும், போராட்டத்தில் வலுசமநிலை, சீறாவும் வலுசமநிலையும், கோட்பாட்டாக்கம் தொடர்பாக, சீறாவில் ஒப்பந்தங்கள், சீறாவும் தற்காலப் போராட்டமும், மக்கள் சக்தியைத் திரட்டுதல் ஆகிய அத்தியாயங் களினூடாக இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37736).