ம.முஹம்மது உவைஸ். நுகெகொடை: ம.முஹம்மது உவைஸ், தமிழ்த்துறைத் தலைவர், வித்தியோதய பல்கலைக்கழகம், கங்கொடவில, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (காலி: அல்பியன் பதிப்பகம், 9 மாத்தறை வீதி).
(6), 113 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 18 x 13 சமீ.
காயல்பட்டினத்தைச் சேர்ந்த புலவர்நாயகம் செய்கு அப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிம் புலவர் இயற்றிய குத்பு நாயகம் என்னும் முகியித்தீன் புராணத்தில் உள்ள யாத்திரைப் படலம், வாய்மை விளக்கிய படலம், பகுதாதுபுக்க படலம், கல்விபயில் படலம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும். இந்நூல் முன்னுரை, குத்பு நாயகம், நாட்டு நகர வருணனை, கல்வியில் ஆர்வம், தாயர்சொல் உறுதி பூண்டது, பாவ மன்னிப்பு, இயற்கை வருணனை, உவமைகளும் உருவகங்களும், குணநல இயல்பு 1, குணநல இயல்பு 2, கல்வியின் பெருமை, வாய்மையின் வெற்றி, கவிதை நடையின் சிறப்பு, அறபுச்சொற்கள், முடிவுரை ஆகிய 15 அத்தியாயங்களின்கீழ் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 30674). மேலும் பார்க்க: 12527