12870 – மக்கள் இனங்கள்.

எச்.ஜே.புளூவர் (ஆங்கில மூலம்), ச.சரவணமுத்து (தமிழாக்கம்). கொழும்பு 7: வெளியீட்டுப் பிரிவு, அரச கரும மொழித் திணைக்களம், 1வது பதிப்பு, 1964. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்).

(6), 69 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 14 சமீ.

Professor H.J.Fleure அவர்களால் எழுதப்பெற்று லண்டன் Ernest Benn நிறுவனத்தால் வெளியிடப்பெற்ற The Races of Mankind என்ற நூலின் தமிழாக்கம் இது. மனிதனின் கூர்ப்பும், பின்னர் புவியியல் தடைகள் அல்லது வாய்ப்புகளினால் தீர்மானிக்கப்பட்டனவும் பல்வேறு திசைகளிற் சென்றனவுமான மனித நகர்வுகளும் பற்றிச் சுருக்கமாக விளக்கும் நூல் இது. மனித இனங்கள், ஆபிரிக்காவிலுள்ள இனம், தென் ஆசியாவுக்கூடாகப் பசிபிக்கு வரை, ஆசியாவில் வடக்கு, வடமேற்கு நகர்வுகள், ஆசிய பருவக்காற்று நிலங்களிலும் பசுபிக்கிலுமுள்ள மக்கள், அமெரிக்கா, ஐரோப்பாவும் மத்தியதரைப் பிரதேசமும் ஆகிய ஏழு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23460).

ஏனைய பதிவுகள்

11904 சின்மயம்: பூஜ்யகுருதேவர் சுவாமி சின்மயானந்தரின்பிறந்த நூற்றாண்டு மலர்: 1916-2016.

சின்மயா மிஷன். யாழ்ப்பாணம்: சின்மயா மிஷன், இல.9, செட்டித்தெரு ஒழுங்கை, நல்லூர், 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிறின்டேர்ஸ், இல. 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). (4), 105 பக்கம், புகைப்படங்கள்,

15550 தீ குளிக்கும் ஆண்மரம்.

ஜே.பிரோஸ்கான். கிண்ணியா-3: பேனா பப்ளிக்கேஷன்ஸ், 92/4, உமர் ரலி வீதி, மஹ்ரூப் நகர், 1வது பதிப்பு, பெப்ரவரி 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 84 பக்கம், விலை: ரூபா