12870 – மக்கள் இனங்கள்.

எச்.ஜே.புளூவர் (ஆங்கில மூலம்), ச.சரவணமுத்து (தமிழாக்கம்). கொழும்பு 7: வெளியீட்டுப் பிரிவு, அரச கரும மொழித் திணைக்களம், 1வது பதிப்பு, 1964. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்).

(6), 69 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 14 சமீ.

Professor H.J.Fleure அவர்களால் எழுதப்பெற்று லண்டன் Ernest Benn நிறுவனத்தால் வெளியிடப்பெற்ற The Races of Mankind என்ற நூலின் தமிழாக்கம் இது. மனிதனின் கூர்ப்பும், பின்னர் புவியியல் தடைகள் அல்லது வாய்ப்புகளினால் தீர்மானிக்கப்பட்டனவும் பல்வேறு திசைகளிற் சென்றனவுமான மனித நகர்வுகளும் பற்றிச் சுருக்கமாக விளக்கும் நூல் இது. மனித இனங்கள், ஆபிரிக்காவிலுள்ள இனம், தென் ஆசியாவுக்கூடாகப் பசிபிக்கு வரை, ஆசியாவில் வடக்கு, வடமேற்கு நகர்வுகள், ஆசிய பருவக்காற்று நிலங்களிலும் பசுபிக்கிலுமுள்ள மக்கள், அமெரிக்கா, ஐரோப்பாவும் மத்தியதரைப் பிரதேசமும் ஆகிய ஏழு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23460).

ஏனைய பதிவுகள்

Rating Away from Better Casinos

Posts Whats The best On-line casino Invited Incentive In the usa? Live Agent Local casino Apps And you may Cellular Fans Gambling establishment Around the

Prism Gambling enterprise Bonuses

Blogs Monro Local casino Added bonus Codes Chase Private Client Examining Crypto Acceptance Extra Prefer A game Totally free Spins With Deposit And if you

13299 நிவேதினி: பால்நிலைக் கற்கைநெறிச் சஞ்சிகை (மலர் 7, இதழ் 2, மார்கழி 2000).

தேவகௌரி, சூரியகுமாரி (இதழாசிரியர்கள்). கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி, 1வது பதிப்பு, மார்கழி 2000. (கொழும்பு: கருணாரட்ண அன் சன்ஸ்;). 53 பக்கம், விலை: ரூபா 200.,