12871 – மறைந்த நாகரிகங்கள்.

ந.சி.கந்தையா. சென்னை 600017: அமிழ்தம் பதிப்பகம், யு 4, மாதவ் குடியிருப்பு, 5 டாக்டர் தாமசு சாலை, தியாகராய நகர், 2வது பதிப்பு, 2004, 1வது பதிப்பு, 1950. (சென்னை 600 017: தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராய நகர்).

xii, 148 பக்கம், விளக்கப்படங்கள், விலை: இந்திய ரூபா 80., அளவு: 21 x 14 சமீ., ISBN: 81-7269-019-3.

‘இவ்வுலகின் பழைய நாகரிகங்களை எல்லாம் ஆராய்ந்து நோக்கின் அவை எல்லாவற்றுக்கும் ஒரே அடிப்படை உண்டு என்பது தௌ;ளதில் தோன்றும். அவ்வடிப்படைதான் யாது என அறிதல் ஆராய்ச்சி வல்லார்க்கெல்லாம் பெரு மயக்கம் அளிப்பதாயிற்று. சிந்துவெளிப் புதைபொருள் ஆராய்ச்சிக்குப் பின்னர் பழஞ்சரித்திர ஆராய்ச்சியிற் றலைமை சான்ற டாக்டர் பிராங்போர்ட் போன்ற சிலர் சிந்துவெளி நாகரிகமே பழைய நாகரிகங்களுக்கு எல்லாம் அடிப்படை யாகவுள்ளதெனத் தமது கருத்தினைத் தயக்கமின்றி வெளியிட்டுள்ளனர். சிந்துவெளி நாகரிகம், ஆராய்ச்சியில் திராவிடருடைய நாகரிகமாகவும், திராவிடருள்ளும் தமிழருடையதாகவும் காணப்படுதல் மிக வியப்பளிப்பதேயாகும். பழைய நாகரிக மக்களின் வரலாறுகளை ஒரு சிறிதளவாவது அறிந்திருப்பின் அன்றோ அவை தம்மை ஒப்பிட்டு அவைகளுக்குள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அறிதல் சாலும். இச்சிறிய நூல் அவ்வழியில் ஊக்குதற்கு எழுந்த ஒரு சிறு நூலாகும்.’ நூலாசிரியர், முன்னுரையில். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36774).

ஏனைய பதிவுகள்