ஜெ.ஜெயராஜ் (இதழாசிரியர்), இ.மதனாகரன் (ஆலோசக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: புவியியற் கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜுலை 1984. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 50, கண்டி வீதி).
94 பக்கம், தகடுகள், புகைப்படங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5 x 17.5 சமீ.
விருத்தியும் விருத்தி தொடர்பான கருத்துக்களும் (சு.செல்வநாயகம்), விருத்தி அடைந்துவரும் நாடுகளின் விருத்திக்கான தடைகள் (தி.பத்மநாதன்), விருத்தி அடைந்துவரும் நாடுகளின் பொதுவான பண்புகளும் வேறுபாடான அமைப்புகளும் (இ.மதனாகரன்), இலங்கையைச் சிறப்பாகக் கொண்டு குறைவிருத்தியும் குறைவிருத்தி அம்சங்களும் (நா.தேவரஞ்சிதம்), பொருத்தமான தொழில்நுட்பமும் விருத்தி அடைந்துவரும் நாடுகளும் (சாரதா சுப்பிரமணியம்), விருத்தியும் குடித்தொகை நிலைமாற்றக் கோட்பாடும் (பங்கயச்செல்வி சிவபாதசுந்தரம்), விருத்தி அடைந்துவரும் நாடுகளின் வர்த்தகம் (ரஜனி நாகராஜா), வன்னிப் பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்தியில் மத்திய இடங்களின் பங்கு (பொ. பாலசுந்தரம்பிள்ளை), ஜப்பானின் வெளிநாட்டு உதவி (கா.ரூபமூர்த்தி), விருத்தி யடைந்துவரும் நாடுகளில் தொழிலின்மையும் அதனோடு தொடர்புடைய பிரச்சினைகளும் (ஜெயந்தி அற்புதநாதன்), விருத்தியடைந்து வரும் நாடுகளில் நகரவாக்கம் (க.கி.ஆறுமுகம்), நில மதிப்பீட்டு ஆய்வுகளில் நில ஆய்வுகளினதும் நில வகைப்பாடுகளினதும் பங்கு (S.T.B.இராஜேஸ்வரன்), விருத்தி அடைந்துவரும் நாடுகளில் கல்வி நிலை (கலாமாலினி நாகரத்தினம்) ஆகிய புவியியல் ஆய்வுக் கட்டுரைகள் இவ்விதழில் இடம்பெற்றள்ளன.