12878 – யாழ்ப்பாணப் புவியியலாளன்: இதழ் 6,7,8 (1989/1991).

செல்வி சரஸ்வதி சுந்தரம்பிள்ளை (இதழ்ஆசிரியர்), S.T.B. இராஜேஸ்வரன் (ஆலோசக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: புவியியற் கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1993. (யாழ்ப்பாணம்: தாசன் அச்சகம்).

(28), 147 பக்கம், தகடுகள், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24 x 18 சமீ.

ஒழுங்கு முறையான மாதிரி எடுப்பு நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு நிலப் பயன்பாட்டுப் படங்களில் இருந்து வேறுபடும் நிலப்பயன்பாட்டு வகைகளை மதிப்பீடு செய்தல்: அரியாலையின் (யாழ் மாவட்டம்) ஒரு பகுதிக்கான நிலப்பயன்பாட்டு வகைகளை மதிப்பீடு செய்தலுக்கான ஆய்வு (பா.இராஜேஸ்வரன்), இலங்கையின் கல்வி அபிவிருத்தி: குடிப்புள்ளியியல் நோக்கு (கார்த்திகேசு குகபாலன்), வடக்கு கிழக்கு மாகாணங்களின் அரிசி உற்பத்தியின் தன்னிறைவு மட்டநிலையும் போக்கும் 1981ஃ82, 1987ஃ88 (க.சுதாகர்), கிளிநொச்சி மாவட்டத்தின் குடித்தொகையின் வளர்ச்சியும் அபிவிருத்திப் பிரச்சினைகளும் (பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை), தமிழர் பாரம்பரியப் பிரதேசம் விவசாயமும் நீர்ப்பாசனமும் (இரா.சிவச்சந்திரன்), வரண்ட வலய இயற்கைத் தாவரங்கள் யாழ்ப்பாணக் குடா நாட்டின் கரையோரப் பிரதேசங்களைச் சிறப்பாகக் கொண்ட ஆய்வு (க.றொபேட்), மாதாந்த மழை வீழ்ச்சிப் பரம்பல் ஒரு ஒப்பீட்டுக் குறிகாட்டி (செ.பாலச்சந்திரன்), காலநிலைக் குறிகாட்டிகள் திருக்கோணமலைப் பிரதேசத்திற்கான ஒர் பிரயோகம் (க.இராஜேந்திரம்), மீன்பிடிப் பொருளியலும் வருமான செல்வு ஆய்வும் (இ.நந்தகுமாரன், ஏ.எஸ்.சூசை), குடியிருப்புக்கள் பற்றிய ஆய்வில் கிறிஸ்ராலரின் மத்திய இடக் கோட்பாட்டின் பங்கு (அ. அன்ரனிராஜன்), புவிமேற்பரப்புத் தகவல்களைப் பெறுவதற்கான செய்ற்கைக்கோள் மூலமான தொலையுணர்வு (ப.சிவசித்திரா), கனகராயன் ஆற்று வடிநில உள்ளார்ந்த அபிவிருத்தி (சரஸ்வதி சுந்தரம்பிள்ளை) ஆகிய ஆய்வுகளை இவ்விதழ் உள்ளடக்கியுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 009734).

ஏனைய பதிவுகள்

Panda Wilds Slots

Content AGS Casino slot games Ratings (Zero Free Games) Tips Enjoy Panda Panda Online Slot machines Cellular Compatibility and you can UI Try the the