12879 – யாழ்ப்பாணப் புவியியலாளன்: இதழ் 9 (1992/1993).

க.சிவகரன் (இதழ் ஆசிரியர்), S.T.B. இராஜேஸ்வரன் (ஆலோசக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: புவியியற் கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1994. (யாழ்ப்பாணம்: தாசன் அச்சகம்).

(16), 96 பக்கம், தகடுகள், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24 x 18 சமீ.

வலிகாமம் தென்மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்கான நிலப்பயன்பாட்டு மதிப்பீடு (த.அருள்மொழி, ந.யசோதினி, பா.அனந்தசக்தி, சூ.கொன்சிலி, ஜே.யூலியட்), வானிலை அவதானிப்பு பகுப்பாய்வு முன்னறிவிப்பு சிறப்பாக அயன மண்டலம் (க.சிவகரன்), வொன்தியூனனின் விவசாய இட அமைவுக் கோட்பாடு (செல்வி வி.சியாமளா), இயற்கைச் சூழல் மாசடைதலும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளும் (எஸ்.கணேசலிங்கம்), நிலைத்து நிற்கும் அபிவிருத்தி (செல்வி ப.கலைச்செல்வி), குடிப்புள்ளியியல் நிலைமாறற் கோட்பாடு (கா.குகபாலன்), அபிவிருத்தித் திட்டமிடலில் சமூகப் பொருளாதார குறிகாட்டிகளின் பயன்பாடு (அ.அன்ரனிராஜன்), சமுத்திரச் சூழலில் பிளாந்தன்கள் (ஏ.எஸ்.சூசை), வடகீழ் மாகாணம்: எமக்குப் பொருத்தமான மாற்றுச் சக்திவளம் (இரா.சிவசந்திரன்), சூழலில் நீர்வளத்தின் முக்கியத்துவம் (செ.பாலச்சந்திரன்), இடி மின்னற் புயல்: ஒரு விளக்கம் (செ.பாலச்சந்திரன்), யாழ்ப்பாண நகரில் நிலமீட்சிக்குட்பட்ட கரையோரப் பகுதிகளில் காணப்படுகின்ற சுற்றுச் சூழல் பிரச்சினைகள் (க.றொபட், செல்வி து.இராஜசூரியர்), யாழ்ப்பாணக் குடாநாட்டிற் கான அபிவிருத்தி திறமுறைகள் (பொ.பாலசுந்தரபிள்ளை), மன்னார்ப் பிரதேச மழைவீழ்ச்சி மாறுதன்மை பற்றிய ஓர் ஆய்வு (சு.இராஜேந்திரம்) ஆகிய ஆய்வுகளை இவ்விதழ் உள்ளடக்கியுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31492. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 009737).

ஏனைய பதிவுகள்

Apple Pay Betting Sites

Content Bet365 Sportsbook And Casino | uk casino blackjack rules How To Bet Safely Online In The Uae Pros And Cons Of Sportsbook Apps Senior