12880 – யாழ்ப்பாணப் புவியியலாளன்: இதழ் 10/11 (1994/1995).

செல்விநளினி திருநாவுக்கரசு (இதழ் ஆசிரியர்), A.அந்தனிராஜன் (ஆலோசக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: புவியியற் கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1997. (கொழும்பு 6: அட்மிரல் கிராப்பிக்ஸ், 403 1/1, காலி வீதி).

xv, 131 பக்கம், தகடுகள், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24 x 18 சமீ.

இவ்விதழில் புவிச் சூழல் ஒழுங்கு (செல்வி ப.கலைச்செல்வி), சூழல் மனிதன் தொடர்பு (செ.ஸ்ரீஸ்கந்தராசா), வளமும் வள அகழ்வினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளும் (கே.ஏ.ஞானேஸ்வரன்), பச்சை வீட்டுத்தாக்கம் (செல்வி கு. சந்திரலீலா), வளிமண்டல ஓசோன்: ஒரு பார்வை (செல்வி ஷர்மிலா சொர்ணலிங்கம்), இலங்கையில் நீர் மாசடைதல் (செல்வி விஜிதா சிவராஜா), அருகிவரும் தாவரப்போர்வையும் சூழலில் அதன் தாக்கமும் (கா.குகபாலன்), நிலவளம் குறைவடைதல்: காரணங்களும் பாதிப்புக்களும் (க.சுதாகர்), சமுத்திரச் சூழல் மாசடைதலும் – விளைவுகளும் (ஏ.எஸ்.சூசை), நகர சனத்தொகை அதிகரிப்பும் சூழற்பிரச்சினையும் (செல்வி நளினி திருநாவுக்கரசு), போக்குவரத்தும் சூழல் பிரச்சனைகளும் (செல்வி அன்பரசி சிவசாமி), ரியோ புவிச்சூழல் உச்சிமாநாடு (செல்வி சுமதி இராசரத்தினம்), இலங்கையில் சூழல் சட்டங்கள் (செல்வி த.தர்மேஸ்வரி), இயற்கை அனர்த்தங்களில் புவிநடுக்கங்கள் (ளு.வு.டீ.இராஜேஸ்வரன்), பொருளாதார வளர்ச்சி சூழல் பாதுகாப்பு: விருத்தியடைந்து வரும் நாடுகள் எதிர்நோக்கும் முக்கிய சவால் (அன்ரனிராஜன்), கோளவெப்ப அதிகரிப்பு (செ.பாலச்சந்திரன்) ஆகிய ஆய்வுக் கட்டுரைகள் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 009738).

ஏனைய பதிவுகள்