சர்ப்பா அருளானந்தம், தியாகராசா தனம் (இதழ் ஆசிரியர்கள்), யு.அந்தனிராஜன் (ஆலோசக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: புவியியற் கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2007. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல. 424, காங்கேசன்துறை வீதி).
xiiஇ 137 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5 x 18.5 சமீ.
யாழ்ப்பாணப் புவியியலாளன் ஆண்டு இதழ், யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறையால் 1983 முதல் வெளியிடப்பட்டு வருகின்றது. இவ்விதழை மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் தங்களது ஆய்வுக் கட்டுரைகளின் மூலம் அலங்கரித்து வந்துள்ளனர். இலங்கையின் நில அமைப்பு, பயிர்செய்கை, போன்ற பல இலங்கை புவியியல் சார் கட்டுரைகளைத் தாங்கி யாழ்ப்பாண புவியியலாளன் வெளிவருகின்றது. இவ்விதழில் காவித் தரவு முறையைப் பயன்படுத்தி புவியியல் தகவல் ஒழுங்கில் இடம்சார் ஆய்வு (அ.அன்ரன் கமிலஸ்), நகரங்களின் உட்கட்டமைப்பு பற்றிய கோட்பாடுகளும் அவற்றின் பிரயோகத் தன்மைகளும் (பா.துஷ்யந்தன்), தந்திரோபாயத் திட்டமிடல் (இ.துஷ்யந்தி), பிரதேசத் திட்டமிடலில் வளர்ச்சிமுனைக் கோட்பாடு (வ.மதுரா, சி.சாயிஜனனி), செயற்றிட்ட முகாமைத்துவம் (சி.திருச்செந்தூரன்), சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் (அ.லக்ஷ்மன்), திண்மக்கழிவு முhமைத்துவம் (அ.சர்ப்பா, பி.சிவகௌரி), யாழ்ப்பாண மாவட்டத்தில் மிதிவெடிகளினால் ஏற்பட்ட சமூக பொருளாதாரத் தாக்கங்கள் (தி.தனம்), இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டி-ஒரு புவிசார் அரசியல் நோக்கு (ந.பிரதீபராஜா), ஐரோப்பிய ஒன்றியத்தின் விரிவாக்கம் ஓர் புவிசார் அரசியல்ரீதியானநோக்கு (பி.விபுலன்), இயற்கை அனர்த்தங்களில் வெள்ளப்பெருக்கு (க.உதயராசா), அனர்த்தங்களும் அவற்றைக் குறைத்தலும் (பொ.பாலசுந்தரம்பிள்ளை), குடித்தொகை வயதடைதல் (கா. குகபாலன்) ஆகிய 13 ஆய்வுக் கட்டுரைகளை இவ்விதழ் உள்ளடக்குகின்றது.