க.குணராசா (புனைபெயர்: செங்கைஆழியான்). யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, திருத்திய 3வது பதிப்பு, ஏப்ரல் 1994, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1972. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலட்சுமி அச்சகம், 37, கண்டி வீதி).
(8), 164 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5 x 14 சமீ.
பொருளாதாரப் புவியியல் என்பது மனிதனையும் அவனது வாழ்க்கைத் தொழிலை யும் விளக்கும் புவியியற் பகுதியாகும். பொருளாதாரப் புவியியல் பொருளாதார நடவடிக்கைகளை ஆராய்வதோடு, அந்த நடவடிக்கைகளை நிலைநாட்ட எக்காரணங்கள் ஏதுவாயிருந்தன என்பதையும் ஆராய்கின்றது. இந்நூலில் உலகின் குடித்தொகை, பண்டையமுறை வாழ்க்கை, உலகின் வேளாண்மை வகைகள், உலகின் நெற்செய்கை, உலகின் கோதுமைச் செய்கை, உலகில் சோளம், பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை, உலகின் மீன்பிடித் தொழில், உலகின் விலங்கு வேளாண்மை, வலுப்பொருட்களும் உலோகப் பொருட்களும், உலகின் பிரதான கைத்தொழில் பிரதேசங்கள், இரும்புருக்குத் தொழில்கள், பொறியியற் கைத்தொழில்கள், இரசாயனக் கைத்தொழில்கள், குடியிருப்புகள், காடுகளும் காட்டுத் தொழில்களும் போக்குவரத்து வசதிகளும் தொடர்பாடல் வசதிகளும் ஆகிய 17 அத்தியாயங்களில் விளக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 30586).